இயக்குனர் கௌதமன் அவர்களின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பினை, 2009 இன் பின்னர் ரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான  ”Pursuit of Justice” என்கிற ஆவணப்படமானது கடந்த 25.03.2015  புதன்கிழமை ஐ.நா அவையின் 24 ஆவது அரங்கிலும் சென்னை ஏ.வி.எம் பிரீவியூ தியேட்டரிலும் சம நேரத்தில் திரையிடப்பட்டது.    மணிவண்ணன் அவர்களின் தயாரிப்பில் உருவான குறித்த ஆவணப்படமானது   [ மேலும் படிக்க ]

அம்பாறை மாவட்டத்தில் அன்று சிங்களவர்கள், இன்று முஸ்லிம்கள் தமிழர்களை கூறுபோட்டு அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் உறுதியாக இருந்து செயற்பட முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.   அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களையும் ஒன்றிணைத்து மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று நேற்று இடம்பெற்றது.   இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்   [ மேலும் படிக்க ]

ஆயுதப் போராட்டத்தின் வெற்றிதான் இன்றைய அரசியல் என்பதனை மறந்து விடக்கூடாது. போராட்டத்தினை நடத்தியவர்களும் நாங்கள். அனைத்தையும் இழந்தவர்களும் நாங்களே.   ஆனால் இன்று பலனை அடைந்தவர்கள் யார்? கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஒரு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதனை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என சிரேஸ்ட சட்டத்தரணியும், தமிழரசிக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.   இன்று நீலன் அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில்   [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைச் சபையின் 28வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் மார்ச் மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வின்போது 18.3.2015 புதன்கிழமை மாலை 17.00 மணியிலிருந்து 18.30 மணிவரை உபமாநாடு நடைபெற்றது.இந்த உப மாநாட்டில் பன்னாட்டு பிரதிநிதிகள்,மனிதஉரிமை செயற்பாட்‌டாளர்கள் கலந்து கொண்ட வேளையில் தாயகத்திலிருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம்,வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சஜீவன்,தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த தமிழின உணர்வாளர் செல்வி   [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பை ஆண்ட கலிங்க இளவரசி உலக நாச்சியினால் மட்டு. ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள கோவில்குளம் என்ற இடத்தில் கி.பி 398 இல் இராஜ கோபுரத்துடன் கூடிய சிவன் கற்கோவில் அமைக்கப்பட்டு பிரதிஸ்டை பண்ணப்பட்டது. இக்கோவிலானது 1697 இல் “அசவிடோ” என்ற போர்த்துக்கேய தளபதியினால் இந்த ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.   1980 ஆம் ஆண்டில் மேற்படி ஆலயம் இருந்ததாக கூறப்படும் கோவில்குளம் பகுதியில் காணிகளை துப்பரவு செய்யும்   [ மேலும் படிக்க ]

குடிதண்ணீருக்காக மக்கள் ஒற்றைக் குடத்துடன் இடுப்புடைய பல நூறு கிலோ மீற்றர்கள் பயணிக்கின்ற காலத்தில் வீட்டின் எல்லையோரம் வட்டக்கிணறு, துலா உழண்டி என பங்குக் கிணறுகளுடன் பங்குபோட்டு அள்ளிப் பருகிய இனம் எம் இனம்.   கால ஓட்டத்தில் பங்குக்கிணறுகள் பாழ். கிணறுகள் ஆகிப்போக வீட்டுக்குள் கிணறு ஊற்றெடுக்க ஆரம்பித்தன. சொந்தமண், சொந்த நீர், எம் உயிர், எம் தண்ணீர் என அள்ளிப்பருகி தாகம் தீர்த்துக் கொண்டது முழுக் குடாநாடும்.   [ மேலும் படிக்க ]

காணாமற்போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் போரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை நடாத்தப்பட்டது.   போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணை நீதியை தேடித்தராது என்று குறிப்பிட்டும், காணாமற்போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியும்   [ மேலும் படிக்க ]

தேசப்பற்று மற்றும் மொழிப்பற்றுக்காக இரா.நாகலிங்கம் ஐயா ”மாமனிதராக”  தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.   இதில் சீமான் கூறியிருப்பதாவது:   ‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் போற்றப்படும் லீ குவான் யூ அவர்களின் மரணச் செய்தி பிற மனிதர்களை நேசிக்கும் மனிதநேய மாந்தர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் இடியாகத் தாக்கி இருக்கிறது.   உலக நாடுகளுக்கே முன்மாதிரி தலைவனாக விளங்கிய லீ குவான் யூ தமிழர்களின் மனங்களிலும் நீக்கமற   [ மேலும் படிக்க ]

தமிழனுக்கு புகழாரம் சூட்டிய சிங்கப்பூரின் தந்தை இன்று மரணம் மனவேதனையோடு அவரின் உரையிலிருந்து இதை கண்ணீரோடு வெளியிடுவதோடு மறைந்த சிங்கப்பூரின் தந்தை முன்னால் பிரதமர் லீ குவான் யூவிற்கு பிரித்தானிய ஈழத்தமிழர் படை கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது.   ”பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உணர்ச்சிப்பெருக்கம்!   சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள்   [ மேலும் படிக்க ]

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் பின்னர், இலங்கை அரசியலில் மாற்றங்கள் நிகழ்வது போன்றதொரு தோற்றப்பாடு கட்டமைப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.   உண்மையிலேயே சீன சார்பு அணி, மேற்குலக சார்பு அணி, இந்திய சார்பு அணி எல்லாமே, ஆட்சி அதிகார மோதலுக்கு இலங்கை அரசியல் களத்தில் பயன்படுத்தப்படும் இராஜதந்திரச் சொல்லாடல்கள் போலிருக்கிறது.   இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றினை ஆய்வு செய்யும் முயற்சியில் சில சிந்தனை மையங்கள் ஈடுபடுகின்றன என்கிற   [ மேலும் படிக்க ]

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.   ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கையெழுத்து இயக்கமானது நியூயோர்கில் ஐ.நா தலைமைகத்துக்கு முன்னாலும், ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலிலும் தொடங்கப்பட்டது.     [ மேலும் படிக்க ]

வடமாகாண சபையினர் நீண்ட காலத்திற்குப் பின்னர் அபிவிருத்தி சார்ந்த ஆக்கபூர்வமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன்.   வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்டிருந்த “முல்லைத்தீவு – காங்கேசன்துறை வரை கரையோர வீதி” அமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானமே அதுவாகும். அத்தீர்மானத்தை உறுப்பினர்கள் பலரும் வரவேற்றார்கள் என்பதும் வரவேற்புக்குரியதே.   தமிழர் தாயகத்தின் வரலாற்று ரீதியான – பாரம்பரிய வீதிகள் இரண்டு. ஒன்று பூநகரியில் இருந்து மன்னார்,   [ மேலும் படிக்க ]

அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் தமிழர்களின் நிர்வாகத்துறையும், நீதிமன்றங்களும், பாதுகாப்புப் பிரிவுகளும் இருந்த காலகட்டம் என்று ஒன்றுண்டு. அதனை நாம் பிரகடனப்படுத்தப்படாத அரசு என்று அழைத்தோம்.   அப்படியிருந்த அந்தக் காலங்களில் தமிழர் தரப்பு உலகநாடுகளின் இராஜதந்திரிகளோடு தமிழர் தீர்வுக்காகப் பேசிய வண்ணமே இருந்தார்கள்.   அவர்கள் தங்களால் முடிந்தளவு இராஜதந்திர நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தார்கள். ஆயுதப் போராட்டம் மிக உச்சநிலையில் இருந்த காலத்திலேயே இவை நிகழ்ந்தன.   இறுக்கமான   [ மேலும் படிக்க ]

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது தேவைகளுக்காக பெயரளவில் வைத்திருக்கின்றார்களே தவிர அதனை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதனை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்க தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். -என்று கோரிக்கை விடுத்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.   நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட   [ மேலும் படிக்க ]