இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஐ.நாவில் பேசக் கூடாது, இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படக்கூடாது, தமிழக மீனவர்கள் தாக்கப்படக் கூடாது, ஈழத்தமிழர்கள் வாழும் சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், இலங்கை உடனான நட்பை இந்திய அரசு முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இப்பேரணி நடைபெற்றது.

chenna-09-2014
இன்று மாலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் தமிழர் பேரணியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மாணவர் அணிகள் , மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். மாலை நான்கு மணி முதல் சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசல் காரணமாக முடங்கியது. எல்லா திசைகளிலும் இருந்து கூட்டம் கூட்டமாக தமிழர்கள் திரண்டனர். தமிழர் நீதிக்காக திரண்ட இக்கூட்டம், தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை கூட்டமாகவே நாம் பார்க்க வேண்டி உள்ளது.

2009 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருக்கும் போது கூட இப்படியொரு பிரமாண்ட தமிழர் பேரணி நடைபெறவில்லை. இப்படியான கூட்டம் சிறிது தனது திசையை மாற்றியிருந்தால் அண்ணாசாலையில் சென்னை நகரமே முடங்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும். ஆனால் 2009 ல் அதற்க்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. தமிழர் கட்சிகள்,அமைப்புகள் அப்போது ஒருங்கிணையவில்லை அல்லது பலம் பொருந்தி இல்லை. இருப்பினும் 2014 ல் காலம் கடந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கூடியது தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியை காட்டுகிறது.

chennai-sep-2014
இன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பேரணி இந்திய அரசுக்கு, குறிப்பாக இந்துத்வா கட்சிகளுக்கும் அமைப்புகளும், திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக அமைத்துள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ என்ற பாடலுக்கு ஏற்ப இன்று தமிழர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைத்து விட்டார்கள் என்ற செய்தி எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கும். அதிலும் தமிழர்களை அழித்தொழிப்பதில் குறியாக இருக்கும் பாஜக அரசுக்கு தமிழர்கள் பெரும் செய்தியை கொடுத்துள்ளனர். தமிழீழ தமிழர் விடயத்திலும் , தமிழகத் தமிழர்கள் விடயத்திலும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அரசை மண்டியிடச் செய்யும் வல்லபம் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு உண்டு என்பதை இன்று நிரூபித்து விட்டார்கள் மானத்தமிழர்கள்.

chenna-may17
தமிழர் நாம் ஒன்று பட்டால் , தமிழீழ விடுதலை மட்டுமின்றி தமிழகத்தின் இறையாண்மையும் சேர்த்தே மீட்டெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இப்படியான பெருந்திறல் போராட்டத்தை ஒருங்கிணைத்த அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழர் ஒற்றுமை இன்று போல் என்றும் ஓங்க வேண்டும். தமிழர் உரிமைகள் அனைத்தும் மீட்கும் வரை தொடர்ந்து நாம் அயராமல் போராடுவோம்.

வாழ்க தமிழ், மலர்க தமிழர் தேசங்கள் !