அனந்தி மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேசியமைக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறுகின்றது

0
311

sivajiஅனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேசியமைக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறுகின்றது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவா சென்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அங்கு சிவாஜிலிங்கம் அவர்கள் பேசும்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதியாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன் என்று தொடங்கி, சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் சிங்கள் அரசாங்கங்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் துன்பங்களைக் கொடுத்தும் படுகொலைகளை நிகழ்தியுமே வந்துள்ளது. இதற்கான நீதியோ தீர்வோ என்றுமே கிடைத்தில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவே மக்களுக்கான நீதியும் தீர்வும் கிடைக்கும் என தமிழ்மக்கள் நம்புகின்றார்கள்.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்த்து காத்துக்கிடங்கின்றார்கள். ஆயிரக்களக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலர் சிங்கள இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டனர், பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டார்கள். அவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இவை அனைத்துக்கும் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட்டு பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியையும் சரியான ஒர அரசியல் தீர்வினையும் பெற்றுத்தர ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையும் அதன் உறுப்பு நாடுகளும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோளினை விடுத்தார்.

அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் கடுமையான எச்சரிக்கைகள் குளப்பும் முயற்சிகள் எல்லாவற்றுக்குமிடையே தமது தனிப்பட்ட முயற்சி காரணமாகவே ஜெனீவாக்கு சென்று மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறியமைக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறியுள்ளது.

இதுபோன்ற தமிழ் மக்களின் பிரதிதிகள் ஜெனீவா வந்து பேசியமையானது வரலாற்றின் முதன் முறையாகும். இவர்களை ஈழத்திலும் மற்றும் புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தமிழர்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரித்துக்கொள்கின்றது.