தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள்.

தமிழகத்தில் எதிர்வருகின்ற 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை உண்ணா நோன்பும், மாலை மாபெரும் எழுச்சி நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அந்த எழுச்சி நிகழ்விலே பழ நெடுமாறன் ஐயா, வை.கோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், மே 17 திருமுருகன் சீமான், மாணவர் அமைப்பின் தலைவர் செம்பியன், புகழேந்தி தங்கராஜா, ஓவியர் புகழேந்தி, புலமைப்பித்தன், கௌத்தூர் மணி, கோவை ராமகிருஸ்ணன், மற்றும் 26 க்கு மேற்பட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், அனைத்து மாணவர் அமைப்புகளும் கலந்து கொண்டு திலீபனின் இறுதி வேண்டு கோளை நிறைவேற்று முகமாக ஒன்று கூடவுள்ளார்கள். அதே தினத்திலே, உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளும் வகையில் அடையாள உண்ணா நோன்பும் எழுச்சி நிகழ்வும் நடைபெற ஒழுங்குகள் நடைபெறுகின்றன. கனடாவிலே வழமை போன்று திலீபன் அவர்களுடைய வணக்க நிகழ்வு நடைபெறும் அதே வேளை அடையாள உண்ணா நோன்பும் இடம்பெறும்

இடம்: விரைவில் அறியத்தரப்படும்

காலம்: செப்டம்பர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அடையாள உண்ணா நோன்பு

மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை எழுச்சி கலை நிகழ்வுகள்

இந் நிகழ்விலே அனைத்து தமிழ் உறவுகளும் திலீபனின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற ஓன்றாய் அணிதிரள்வோம். அடையாள உண்ணா நோன்பில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம் 416-830-7703

கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும்