Thirumurugan-gandhi-300‘அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒரே கோரிக்கைக்காக ஒன்றிணைந்தால் என்ன’ என்கிற கேள்வி நம் அனைவரிடத்திலும் அவ்வப்பொழுது எழுந்து கொண்டே இருக்கும். நெருக்கடியான காலத்தில் இது வலுப்பெறுவதை பார்த்திருப்போம்.

அனைவரும் தமது வலிமையை ஒன்றிணைத்தால் ஈழ விடுதலைக் கோரிக்கையை சாத்தியப்படுத்த முடியும். லட்சம் தமிழர்கள் சென்னையில் திரண்டால் வெல்லமுடியாத கோரிக்கையென்று எதுவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தபோதும் இது நிகழ்வதில்லை. இனப்படுகொலை நிகழ்ந்த காலத்திலும் இது நடந்ததில்லை.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இன்று தோழர்.வேல்முருகன் அவர்களுடைய முன்முயற்சியினாலும், பல்வேறு ஈழ ஆதரவு கட்சிகள் மற்றும் தமிழர் உரிமைகளில் முன்னனியில் நிற்கும் இயக்கங்களின் தலைவர்களின் ஒத்துழைப்பாலும் கோரிக்கைகள் அடிப்படையில் ஒன்றிணைந்து போராட்டம் நிகழ்த்துவது சாத்தியமாகி இருக்கிறது.

பாஜக, இந்துத்துவ ஆற்றல்கள் இலங்கையோடு கைகோர்த்து நின்று தமிழின எதிர்ப்பினை தீவிரப்படுத்துகின்ற இக்காலத்தில் கோரிக்கை அடிப்படையில் நாம் ஒன்றாக திரள்வது நம் எதிரிகளுக்கு பின்னடைவினை தரும். கோரிக்கைகள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் கைகோர்ப்பதில் தவறு இருக்க முடியாது. நாம் அனைவரும் இணைந்து நின்றால் கோரிக்கைகள் பிழையாக போகும் வாய்ப்பும் இருக்காது.

தமிழீழ ஆதரவாளர்கள் பாகிஸ்தானோடு இணைந்து பயங்கரவாத சதியை செய்கிறார்கள் எனும் ஆர்.எஸ்.எஸ்+இந்துத்துவ அரசின் பொய் பிரச்சாரத்தினை முறியடிப்பதை மக்கள் திரளால்தான் சாத்தியப்படுத்த முடியும்.

சில நூறு தமிழர்கள் இணைந்து போராட்டம் நடத்தியதாலேயே இந்திய அரசும், இலங்கை அரசும், சர்வதேசமும் நம் கோரிக்கையினை கணக்கில் கொள்ளாமல் இனப்படுகொலை செய்தார்கள். நாம் தனித்தனியாக போராடிய பொழுதுகளில் சில நூறு பேரைத்தவிர அதிக அளவில் திரட்ட இயன்றதில்லை. இனி நாம் அனைவரும் இணைந்து ஆயிரக்கணக்கான தமிழர்களை திரட்டும் சந்தர்ப்பத்தினை உருவாக்குவோம்.

உலகின் பிற நாடுகளில் நிகழும் பெரும்திரள்போராட்டங்களை தமிழகத்திலும் சாத்தியப்படுத்துவோம்..

சு.சாமி போன்றவர்கள் பொதுத்தளங்களிலும், ஊடகங்களிலும் நம்மை உதாசீனப்படுத்துவதன் அடிப்படையே நாம் சில நூறு பேர்களாக திரளுவதால் என்பதை நாம் புரிந்து கொண்டால் இந்த நரிகளை நாம் வேட்டையாட முடியும்.

இப்போராட்டம் நமது வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வலிமையை அளிக்கட்டும். கூடன்குளம், நியூட்ரினோ, மூவர் தூக்கு, மீனவர் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை என நீண்டு செல்லும் பிரச்சனைகளை உடைத்தெரியும் வலிமை கொள்வோம்.

செப்டம்பர் 24, சென்னையில் தமிழர் எழுச்சி பேரணி. லட்சம் தமிழர்கள் கைகோர்ப்போம்.

எதிரிகள் திணர, நாம் திரளுவோம்.

எச்சரிக்கை மணி அடிக்க லட்சமாய் திரளுவோம்.

திரு திருமுருகன்காந்தி
தலைவர்
மே17 இயக்கம்.