தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.
இந்த அநீதியைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

hang-sri
இதன் ஒரு பகுதியாக, இன்று (09.11.2014) காலை 10 மணி முதல் மாலை வரை மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் மரணதண்டனைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் இராசிவ் கொலை வழக்கில் இந்திய அரசால் தூக்கு கொட்டடிக்கு அனுப்பப்பட்ட நிரபராதித் தமிழர் பேரறிவாளனின் தாயார் அற்புதம் குயில்தாசன் அவர்கள் தலைமையில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
இதில் திரளான தமிழுணர்வாளர்களும் மரணதண்டனைக்கெதிரான ஆர்வலர்களும் பல்வேறு இயக்கங்கள் – அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. நல். ஆறுமுகம், தோழர் இளங்குமரன், தோழர் கோவேந்தன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

==========================

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

==========================
பேச: 7667077075, 9047162164