sam-usaஅமெரிக்கா அரசின் தமிழ் இன துரோகத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் கண்ட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் – தாயக மக்கள் கட்சி !

 

அமெரிக்கா அரசின் தமிழ் இன துரோகத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் கண்ட தீர்மானம் நிறைவேற்ற தாயக மக்கள் கட்சி வலியுறுத்தவுள்ளது. அதற்காக சட்டமன்றத்திற்குள் செல்லும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் காலணிகளை துடைத்து தீர்மானம் நிறைவேற்ற உதவுமாறு கோரும் போராட்டமொன்றையும் நடாத்தவுள்ளேன்.

 

இலங்கையின் இனப்படுகொலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மற்றும் அமெரிக்க அரசின் துரோகத்தனம் குறித்தும் அதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறிததும் விளக்கும் அறிக்கையொன்றையும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

 

எனது போராட்டத்திற்கான காவல்துறை அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு இன்று மாலை 3.00 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் அனுமதிகோரி மனு அளிக்கப்போகின்றேன்.

 

கி. வீரலட்சுமி
தலைவர் – தாயக மக்கள் கட்சி

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பேசவுள்ளார்

 

இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் பன்நாட்டு விசாரணை தேவை என வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு பசுமை தாயகம் சார்பில் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அந்த மனுவை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பேசவுள்ளார்.

 

 

உள்ளக விசாரணை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் – சிவாஜிலிங்கம்

 

இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல் போன்ற எல்லாவற்றுக்கும் சரவதேச விசாரணையே எமக்குத் தேவையானது.

 

தொப்புள்கொடி உறவுகளான தாய்தமிழகம் குறிப்பாக மாணவர்கள், பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களும் இந்த நேரத்தில் எழுந்துநின்று மிக உறுதியாக குரல் கொடுக்கவேண்டும் என்று பகிரங்கமாக இருகரம் நீட்டி வேண்டுகின்றோம். மேலும் புலம்பெயர் தேசத்தின் வாழும் எங்கள் ஈழத்தமிழினம், சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மிக உறுதியாக ஆக்ரோசமாக போராடவேண்டும் என்று இந்த தரணத்தில் தாயகத்தில் இருந்து பகிரங்கமாக வேண்டுகின்றோம்.

 

திரு எம் கே சிவாஜிலிங்கம்
வடமாகாண அவை உறுப்பினர்
யாழ்ப்பாணம் மாவட்டம்.

 

 

அமெரிக்கா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை என்கின்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது கவலையளிகின்றது

 

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதற்கிடையில் அமெரிக்கா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை என்கின்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது கவலையளிகின்றது.

 

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் வெற்றியளிக்கவில்லை.

 

சர்வதேச பிரதிநிதிகளின் கண்காணிப்பில் உள்நாட்டில் நடந்துள்ள விசாரணை ஆணைக்குழுக்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லை.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ள சூழ்நிலையில், பெருமளவிலான அரசியல் கைதிகள் இன்னும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கைப் போரின் இறுதி மாதங்களில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர் குழுவின் முன்னைய அறிக்கை ஒன்று கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

-சட்டவாளர் திரு.கே.எஸ்.ரட்ணவேல்

 

ஐநா நோக்கிய மாபெரும் பேரணி

 

தமிழின அழிப்புக்கு நீதி கோரி அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கிய மாபெரும் பேரணி

 

https://youtu.be/Wu42EmPOWQk