KFCதமிழீழ இன அழிப்பு செய்த சிறீலங்கா அரசு மீது சர்வதேச விசாரணை தேவை என்றும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழர்கள் போராடி வருகையில்…

 

ஐ.நாவில் தமிழர்களுக்கு துளியும் பயனற்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து உள்ளது. ஈழ விடுதலைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு தன் வல்லாதிக்கத்தை அரங்கேற்றி வரும் “அயோக்கிய அமெரிக்கா” கலப்பு உள்நாட்டு விசாரணை போதும் என்றும் கூறிவருகிறது.

 

அதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவை பொருளாதாரரீதியில் வீழ்த்துவதற்காக நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களில், பாண்டிசேரியில் அமெரிக்க நிறுவனமான கேஎப்சியை (KFC) பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து உடைத்து எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.

 

இதனிடையே, இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த அமெரிக்கத் தீர்மானம் இன்று மாலை ஐ. நா மனிதஉரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக BTF இணைப்பாளர் ரோஷினி தெரிவித்தார்.

 

அதில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச சட்ட ஆய்வாளர்கள், மற்றும் நீதிப் பொறிமுறையுடன் இணைந்த உள்ளக விசாரணை குறித்து கூறப்படுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் 30 திகதிக்குப் பின்னரே அதில் சில விடயங்கள் சேர்க்கப்படுவதா? அல்லது நீக்கப்படுவதா? என்பது குறித்து தெளிவாக தெரியவரும் எனவும் எனினும் தமிழர்கள் பெரிதாக எதிர்பார்க்கும் விடயங்கள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்தப்படவேண்டும் என பல நாடுகளும் ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் ரஸ்யா, சீனா, கியூபா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளக விசாரணையே நடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளன.

 

இன்றையதினம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நண்பகல்வேளை வெளியிடப்படும் என கூறப்பட்டபோதிலும் பல்வேறு வாத பிரதிவாதங்களுக்குப் பின்னர் இன்றையஅமர்வு நிறைவு நேரத்திலேயே அது சமர்ப்பிக்கப்பட்டதாக ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.