kasi-ananthanஇன்று ஜ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் வந்துள்ள அமெரிக்க பிரிட்டன் தீர்மானங்கள் வெறும் உப்புசப்பில்லாத தீர்மானமே அதில் எதுவும் இல்லை திரும்பவும் இரண்டு ஆண்டுகள் சிறீலங்கா அரசிற்கு ஒருவாய்ப்பு கொடுகின்றார்கள் இரண்டு ஆண்டுகள் என்பது ஒரு நீண்டகாலம் 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜந்து ஆண்டுகளில் தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தில் பல இடங்களை நாங்கள் இழந்து நிக்கின்றோம்.

இன்றும் நாங்கள் மண்ணை இழந்து கொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் என்பது சிங்கள அரசிற்கு தமிழர்களின் மண்ணை முழுமையாக திண்டு ஏப்பம் விடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை நான் சுட்டிக்காட்டுகின்றேன் என்றும் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு இந்ததீர்மானத்தை கண்டித்தாகவேண்டும் அவர்கள் தலைமை இதனை கண்டித்தாகவேண்டும் இது எங்களுக்குரிய தீர்மானம் என்று உரத்து சொல்ல வேண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு உரிமை உண்டு உறுதி இல்லை என்றால் அவர்களுக்காக நான் வருத்தப்படுகின்றேன்.

தமிழீ மக்களுக்கு ஒரு உணர்வு பிறக்கின்றது தமிழீழ மக்களே அந்த பேரினை முன்னெடுக்கவேண்டும் என்ற உணர்வு பிறக்கின்றது உலகத்தை இப்படியே நம்பிக்கொண்டிருக்கமுடியுமா? என்றஏக்கம் பிறக்கிறது உலகம் கைதரும் என்று எதிர்பார்த்தோம் கைதரவில்லை அதனால் கவலை பெருமூச்சு வருகிறது எங்கள் தாயகத்தை எந்தகாலதிலும் நாம் இழக்கமாட்டோம் தமிழீழ மண்ணை எந்தகாலத்திலும் நாங்கள் பறிகொடுக்கமாடடோம் தமிழீழ மக்களின் விடுதலை பேராட்டம் தொடரும் உலகத்தால் முடியவில்லை என்றால் மீண்டும் அழுத்தமாக சொல்கின்றேன் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது இது தொடர்பில் புலம்பெயர் தமிழ்மக்கள் தங்கள் அடுத்த கட்ட பேராட்டம் தொடர்பில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் உணர்சி கவிஞர் காசியானந்தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.