tamil-eelamவடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மத்தியில் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான தீர்மானம் ஒன்றையும் அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்திய பிரேரணையை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது. இது வரவேற்க வேண்டிய விடயம்.

அதேநேரம் இதில் முக்கியமான மேலும் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். முதலாவதாக, சூடானில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கருத்துக் கணிப்பு ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசாங்கத்தை தேவை என்பதை அறியும் வகையில் இந்த கருத்துக் கணிப்பு அமைய வேண்டு.

இரண்டாவதாக, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: Uthayan