அரசுக்கு வழங்கப்படும் கால அவகாசம் தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க ஏதுவாகிறது

0
434

ravikaranஅரசுக்கு வழங்கப்படும் கால அவகாசம் தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க ஏதுவாகிறது என வடமாகாண சபை உறுப்பினர் திரு.து.ரவிகரன் தெரிவித்தார்.

இன்று காலை அமெரிக்க அரசியல் பிரதிநிதி மைக்கேல் யு. எர்வினை வடமாகாண சபை உறுப்பினர் இவரது அலுவலகத்தில் சந்திக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அதிகார பலத்துடன் தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் நடைபெறும் நில அபகரிப்புகள் எல்லையற்று தொடர்கிறது. பல்வேறு ஆதாரங்கள் வட மாகாணசபை உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது.

மாந்தை கிழக்குஇ துணுக்காய் பிரதேசங்களிலும் அபகரிப்புக்க்கள் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 58.96 வீதமாக இருந்த தமிழர்கள் 2012 இன் படி 39.79 வீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் 4.66 வீதமாக இருந்த சிங்கள மக்கள் 2012 இன் படி 23.15 வீதமாக உயர்ந்துள்ளது. இந்த வீதத்தில் பெரும்பகுதி எமது பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் அமைத்துள்ளது. இப்போது இந்த நடவடிக்கைகள் வடக்கில் முல்லைத்தPவு,வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சிஇ யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் தொடர்கின்றது.

இந்நிலையில் எங்களுடைய மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாகவே இன்று நாம் உங்களைப் பார்க்கின்றோம். எமது மக்களுக்கு விடிவு கிடைக்க உங்களின் முயற்சி அவசியமாகிறது.

2012 மற்றும் 2013 காலத்திலேயே குடியேற்றங்கள் நடைபெற்றது. தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இந்த நிலை இன்னும் மோசமாகிறது.

2009 தொடக்கம் 2014 வரை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட நல்லிணக்க அவகாசம் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கவே பயன்பட்டிருக்கிறது. இனியும் கால அவகாசம் வழங்குவது இந்த நிலையை இன்னும் தீவிரமாக்குவதாகவே அமையும். ஆதலால் இம்முறை கொண்டு வரும் தீர்மானத்தை தமிழ் மக்களுக்கு பயனளிக்க கூடியதாகவும் இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூற வைக்கும் வகையிலும் கொண்டு வரும்படியே உங்களிடம் கோருகிறோம் என தெரிவித்தார்.

நன்றி: உதயன்