இன்று உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த ஈகைச் செல்வன் திலீபனின் நினைவு நாள் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், தமிழீழ ஆதரவாளர்கள் இன்று திலீபனின் நினைவு நாளில் அவருக்கு வீர வணக்கத்தை செலுத்தினர். காவல்துறையின் கெடுபிடிகளுக்கு நடுவே இந்த நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழர் ஆட்சி மலரும் போது திலீபனின் நினைவு நாள் தமிழக அரசின் சார்பில் அதிகாரப் பூர்வ வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படும். திலீபனின் ஒப்பற்ற அறவழிப் போராட்டத்தை உலக மக்கள் அனைவரும் அறியும்படி செய்யப்படும்.

thileepan-98
இன்று மாலை தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈகி திலீபனுக்கு வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. “போராடுவோம் போராடுவோம் தமிழீழம் மலரும் வரை தமிழர் நாம் போராடுவோம்” என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டு அனைவரும் அதற்காக உறுதி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் தோழர் அதியமான், இராச்குமார் பழனிசாமி மற்றும் தமுக கட்சினர், தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். தியாக தீபன் திலீபனின் கோரிக்கை மற்றும் வரலாற்றை அதியமான் அவர்கள் வந்திருந்த தோழர்களுக்கு கூறினார்.