சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு அரசு பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.மே 18 இற்கு பிறகு சிங்களத்தின் இலக்காக முஸ்லிம்கள் மாறியிருந்தது ஒன்றும் பரமரகசியமல்ல.. படிப்படியாக முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வு, பொருளாதாரத்தை இலக்கு வைத்து கொண்டிருந்த இன அழிப்பு அரசு தற்போது உயிர்ப்பலியையும் தொடங்கிவிட்டது.

muslim1
தமிழர்கள் அழிக்கப்பட்டவிதமும் அது சிங்கள பொதுப்புத்தியில் உருவெடுத்திருந்த கூட்டு உளவியலும் தம்மைத்தான் இனி குறிவைக்கும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருக்க வேண்டும்.. அதன்வழி தம்மை தயார்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் சந்தர்ப்பவாத முஸ்லிம் தலைமைகளால் இந்த உண்மை மறைக்கப்பட்டு இன்று ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இனஅழிப்பு அரசின் பலிபீடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

நேற்றைய வன்முறை என்பது இனஅழிப்பு அரசால் மிகக் கவனமாகத் திட்;டமிடப்பட்ட ஒன்று என்பதைச் சொல்வதற்கு எந்த அரசியல் அறிவும் தேவையில்லை.

இப்போது ஏன் இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டார்கள் என்பதில் தான் சிங்களத்தின் இராஜதந்திரம் இருக்கிறது.. ஆனால் அது பல்லிளித்து விட்டது என்பதுதான் உண்மை.

கடந்த மார்ச் ஜெனிவாவில் மனித உரிமை சபையில் தமக்கு எதிராக தீர்மானம் வருவதை தடுக்கு முகமாக சிங்களம் திடீரென்று புலிப்பூச்சாண்டி காட்டியதை நாம் அறிவோம். தமிழர் தரப்பு மிக்க கவனமாக உறுதியாக நின்று இந்த பொய்களை அம்பலப்படுத்தியதன் விளைவாக சிங்களத்தால் தமது இலக்கை எட்ட முடியவில்லை..

தற்போது ஐநாவின் விசாரணைக்குழுவை தடுக்க வேண் டிய கட்டாயம். பூலிப்புச்சாண்டி எடுபடாது என்று தெரிந்துவிட்டது. எனவே முஸ்லிம்களை சீண்டிவிட்டு நாட்டில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கிவிட்டால் தற்காலிகமாகத்தன்னும் ஐநா விசாரணையை முடக்கலாம் என்பதே சிங்களத்தின் திட்டம்..

அதுதான் இந்த திட்டமிடப்பட்ட வன்முறை நாடகம்.

அத்தோடு புதிதாக பதவியேற்றிருக்கும் பிராந்திய வல்லரசின் பிரதமரான மோடியை குளிர்விக்கவும் ஐநா தீர்மானங்களின் பின் நின்று இயக்கும் அமெரிக்காவை திருப்திபடுத்தவும் இயல்பாகவே முஸ்லிம்களின் எதிரிகளான இவ்விரு சக்திகளையும் முஸ்லிம்களை இலக்குவைப்பதனூடாக திருப்திபடுத்தலாம் என்ற கபட நோக்கமும் இதன் பின்னணியில் இருக்கிறது.

muslim2
அதுதான் அண்மைக்காலமாக தலிபான் மற்றும் அல்கைதாவினர் இலங்கையில் காலூன்றியுள்ளதாக ரொகான் குணரட்ன போன்ற இனஅழிப்பு அரசின் தூதுவர்கள் கதைகளை பரப்பினார்கள்.

தமிழின அழிப்பின்போது “பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என்ற உலகளாவிய சிந்தனையை உள்வாங்கி பிராந்திய மற்றும் மேற்குலக ஆதரவை பெற்றதை கவனத்தில் கொண்டு தற்போதைய முஸ்லிம்களுக்கு எதிரான உலாகளாவிய போக்கை தமது ஐநா விசாரணைக்கு எதிராக திருப்பலாம் என்ற சிங்களத்தின் கணக்கு பொய்த்து போனதுதான் இங்கு நடந்திருக்கிறது.

மேற்குலக அரசுகள் தமது கேந்திர நலனை கொண்டு மறைமுகமாக இனஅழிப்பிற்கு துணைபோவார்களே ஒழிய இப்படி அப்பட்டமான இனஅழிப்பிற்கு துணைநின்று தம்மை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.

இதை சிங்களம் உணராததன் விளைவுதான் இது.

தூண்டிவிட்ட இனவாதிகளை அடக்க முடியாமலும் முஸ்லிம்களையும் பகைத்து இக்கட்டில் சிக்கிவிட்டது இனஅழிப்பு அரசு.

போதாததற்கு நவநீதம் பிள்ளை எச்சரிக்கும் அளவிற்கு கதை மாறிவிட்டது.

தமிழின அழிப்பின் போது இருந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வேறு.தற்போதைய நிலை வேறு. அத்தோடு போர்க்குற்ற விசாரணைகளின் காரணமாக நடக்கும் நிகழ்வுகளை பலதரப்பும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் சூழல் இது. இங்கு இனி எந்த நாடகங்களும் மேடையேறப்போவதில்லை..

சிங்களத்தின் குற்றப்பட்டியலில் புதிதாக இந்த வன்முறையும் பதிவாகிய வரலாறுதான் நடந்து முடிந்திருக்கிறது.

பிள்ளையார் பிடிக்கபோய் குரங்கான கதை இது..

ஈழம்ஈநியூஸ்.