அவதார் ஒன்று கூறிய செய்தி என்ன?

0
647

avatar-the-game-thanatorஎதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கமரனில் இயக்கத்தில் அவதார் பாகம் இரண்டு படம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் அவதார் ஒன்று கூறிய செய்தியை நாம் புரிந்து கொண்டுள்ளோமா என்பது தான் கேள்வி?

அவதார் ஒன்றின் இறுதிச் சமரில் தாக்குதலுக்குள் சிக்கிய தமது இனத்தை காப்பாற்ற ஏனைய பகுதிகளில் இருந்து அலை அலையாக கிழம்பிய அந்த இனத்தை சேர்ந்தவர்களின் ஒற்றுமையை தான் இங்கு குறிப்பிடுகின்றோம்.

இன்று இனஅழிப்புக்குள் சிக்கியுள்ள ஈழத்தமிழ் இனத்திற்கும் இவ்வாறான ஒரு உதவியே தேவையாக உள்ளது. தமிழகம் உட்பட உலகம் எங்கும் உள்ள தமிழ் இனத்தின் ஒன்றுமையின் மூலம் தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைவரை கொண்டு செல்லமுடியும்.

சிறீலங்கா அரசு மேற்கொள்வது ஒரு இனஅழிப்பு என்பதை அனைத்துலக சமூகத்தின் முன்னால் உறுதிப்படுத்தினால் மட்டுமே தமிழ் இனம் தனது அரசியல் உரிமைகளை பூரணமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பைக்கோர முடியும்.

தான் மேற்கொள்ளும் இனஅழிப்பை மறைத்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் தனது நாடகத்தை தக்கவைப்பதற்காக சிறீலங்கா அரசு தனது அதிகாரிகளை அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அனுப்பவுள்ளது. இந்த நடவடிக்கையை நாம் முறியடிக்கவேண்டும்.

அதற்கு நாம் எமது ஒன்றுமையை காண்பிப்பதுடன், அனைத்துலக சமூகத்துடனான எமது தொடர்புகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தங்களையும் தீவிரப்படுத்தவேண்டும்.

தற்போதைய உலக ஒழுங்கில் தனிநாடுகளின் உருவாக்கம் என்பது சாத்தியமில்லை என்ற போலியான கருத்துக்கள் எம்மக்களின் மத்தியில் காலத்திற்கு காலம் விதைக்கப்பட்டு வரப்பட்டுள்ளன. ஆனால் உண்மை என்பது அதற்கு மறுதலையானது என்பதை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஸ்கொட்லாந்தின் பிரிவினை மீண்டும் எமக்கு கூறவுள்ளது.

இந்த பிரிவினைவை தடுப்பதற்கு ஸ்கொட்லாந்தில் உள்ள உங்கள் உறவுகளுடன் ஒவ்வொரு மக்களும் தனிப்பட்ட ரீதியில் பேசுங்கள் என பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரன் கடந்த வாரம் தெரிவித்துள்ளார். பிரிவினையை எதிர்ப்பவரே ஒற்றுமையை தேடி அலைதுயும் போது, சுதந்திரத்தை தேடும் இனம் அதனைவிட பல மடங்கு வேகமாக ஒற்றுமையை தேடவேண்டும்.

இந்த நிலையில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தனிநாடுகளாக பிரிந்து சென்ற நாடுகளின் பட்டியலை பார்ப்பது பொருத்தமானது.

1958 இல் பொதுவாக்கெடுப்பின் மூலம் கயானா தனி நாடாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

1990 ஸ்லோவேனியா பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

1991 இல் குரோஷியா பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

1991 இல் மாசிடோனியா பொது வாக்கெடுப்பிலே தனிநாடு.

1992 இல் போஸ்னியா றெர்சகோனா தனி நாடு.

1993 இல் ஆறு இலட்சம் மக்களைக்கொண்ட எரித்திரியா பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

1999 இல் கிழக்கு தைமூர் பொதுவாக்கெடுப்பிலே தனி நாடு.

2006 மாண்டிநீரோ பொது வாக்கெடுப்பிலே தனிநாடு.

2011 தெற்கு சூடான் பொது வாக்கெடுப்பிலே தனிநாடு.

2015 க்கும் 2020 இடையில், போகன்வில்லே என்ற ஒரு நாடு கினியாவிலே இருந்து பிரிந்துபோக, பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது.

ஆஸ்திரேலியாவிலேஇருந்து கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் தொலைவு கிழக்கே இருக்கக்கூடிய நியூ கலிடோனியாவிலே 2016 இல் இருந்து 2019 க்குள் ஒரு பொதுவாக்கெடுப்பு நடக்கப் போகிறது.

ஈழம் ஈ நியூஸ்