27.11.2014. வியாழக்கிழமை அன்று Newington Reserve, Holker Street, Silverwater எனும் இடத்தில் திறந்த வெளி அரங்கில் மாவீரர் நினைவு எழுச்சி நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டார்கள்.

Aus-1
தமிழீழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டிருந்த நுளைவு வாசல் போன்று, மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நுளைவு வாசல் ஊடாக, நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் யாவரும், மாவீரர்துயிலும் இல்ல வாளாகத்தினுள் வந்து உணர்வுபூர்வமாக கலந்துகொண்டார்கள். தமிழீழத்தல் எதிரிகள் எங்கள் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை அழித்தாலும், எமது உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை என்றுமே அழிக்கமுடியாது என்பதை எடுத்துக்காட்டியது.

முதல் நிகழ்வாக பொதுச்சுடரை பரந்தனை சேர்ந்த இராசரத்தினம் பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட இறுதிச்சமரில் வீரகாவியமாகிய வீரவேங்கை இசைவண்ணனின் சகோதரன் தீபன் இராசரத்தினம்; ஏற்றிவைத்தார்.
தழிழீழ தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சிட்னிப்பணியகப் பொறுப்பாளர் ஐனகன் சிவராமலிங்கம் ஏற்றிவைக்க அவுஸ்திரேலிய கொடியை முன்னால் யாழ்நகர பிதா விசுவநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

Aus6
தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது.

ஈகைச்சுடரை மன்னார் ஆட்காட்டிவெளியில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த nஐகநாதன் சிவலோகநாகர் என்ற இயற்பெயரை கொண்ட வீரவேங்கை ஐPவா அவர்களின் பெறாமகன் குமரன் இரத்தினசிங்கம் ஏற்றிவைத்தார்.

மாவீரர்களின், நெஞ்சை உருக்கும், துயிலும் இல்ல பாடல் ஒலிக்க மலர் வணக்கத்தை மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் அழகாக செதுக்கி வைக்கப்பட்ட அவர்களின் கல்லறைகளுக்கு உணர்வுபூர்வமாக விளக்கேற்றி மலர்அஞ்சி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, அனைத்து மக்களும் மாவீரர்களை மனதில் நிறுத்தி பொதுக்கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்னார்கள்.

சிறப்புப் பேச்சாளர்களாக தமிழர் ஒருங்கழணைப்புக்குழு செயற்பாட்டாளர் சரவணமுத்து தேவராசா உணர்வு பூர்வமான உரையை தமிழில் நிகழ்த்த Bruce Haigh Deputy High Commissioner at the Australian High Commission, Colombo 1994 1994 அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

Aus-2
தொடர்ந்து இளம் செயற்பாட்டாளர் செந்தூரன் தேவராசா அவர்கள் முதல் முறையாக சிட்னியில் இருந்து வெளியாகிய புதிய ஓர் நடனத்துடன் கூடிய எழுச்சி பாடலை திரைக்காட்சியாக வெளியிட்டார்

அடுத்து சிட்னி இளம் கலைஞர்கள் மாவீரர்நினைவுகள் சுமந்த பாடல்களை உணர்வுபூர்வமாக பாடினார்கள்.

இறுதிநிகழ்வாக யாழ் தேவி என்ற பாழ்தேவியின் வரவால் தமிழீழத்தில் நடைபெற இருக்கும் அனர்த்தங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுவரக்கூடியதான ஒரு புதிய பாணியில் ஆன நாடகத்தை நடத்தி மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி அனைவரும் இறுதியில் எழுந்துநின்று “எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்” என்ற பாடலை உணர்வுபூர்வமாக பாடவைத்தமை இந்த நாடகத்தின் வெற்றியை கூறிநின்றது.

இறுதியாக உறுதிமொழி எடுக்கப்பட்டதுடன், தமிழீழ தேசியக்கொடி, அவுஸ்திரேலியா கொடிகளை இறக்கிவைக்கப்பட்டன.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எழுச்சிக்குரலுடன் உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவு பெற்றது.