இன அழிப்பிலிருந்து தப்பி செல்லும் தமிழர்களை விரட்டி பிடிக்க இரு நவீன கடலோர ரோந்து படகுகளை சிறீலங்கா சென்றுள்ள அவுஸ்ரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இன்று புதன்கிழமை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

அகதிகளுக்கான ஐநா சாசனம், சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தங்கள் உட்பட இன்ன பிற அனைத்துலக மனிதஉரிமை சட்டங்களையும் மீறி தமிழர்களை நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்புவது தொடர்பாக அனைத்துலக ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் விசனத்தை வெளியிட்டு வரும் நிலையில் அது குறித்த எந்த கரிசனையுமின்றி இன அழிப்பு அரசுடன் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் கைகோர்த்துள்ளதையே மேற்படி சம்பவம் சுட்டி நிற்கிறது.

Scott_Morrison_rajapaksa_1
அத்தோடு இன்று வடக்கிற்கு சென்ற ஸ்காட் மாரிசன் இனஅழிப்பு அரசின் இராணுவ கவர்னர் சந்திரசிறீ உட்பட பல சிங்கள அதிகாரிகளைளை சந்தித்துள்ள நிலையில் திட்டமிட்டு தமிழர் தரப்பை சந்திப்பதை தவிர்த்துமிருக்கிறார்.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்த முன்நின்ற அவுஸ்திரேலியா ஜெனிவாவில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதை தடுக்க முயன்றதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் உன்னிப்பாக அதானிக்கும்போது, தமிழர்களுக்கு தமிழின விடுதலைக்கு எதிராக ஒரு மோசமான அனைத்துலக வலைப்பின்னல் ஒன்றை பின்ன அவுஸ்திரேலியா ஆரம்பித்துவிட்டதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

australia_minister_met_chandarsir5
ஐநா மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கமைய மேற்கொள்ளப்படவிருக்கும் அனைத்துலக விசாரணை பொறிமுறையில் அவுஸ்திரேலியாவின் இந்த போக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். நடந்தது இன அழிப்பு, தொடர்ந்து நடைபெறுவது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்ற உண்மையை அவுஸ்திரேலியா மூடிமறைக்க முற்படுவதாகவே இங்கு நாம் கருத வேண்டியுள்ளது.

இதை அகதிகளுக்கு எதிரான பிரச்சினை என்று சுருக்கி பார்க்காமல் அவுஸ்திரேலியாவின் இந்த போக்கை தமிழர் தரப்பு உடனடியாக எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

குறிப்பாக அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் உடனடியாக தொடர் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

இல்லையேல் எமக்கு பாதகமான அரசியல் விளைவுகள் இதன்வழி கிட்ட நேரிடலாம்.

ஈழம்ஈநியூஸ்.