இந்திய தேசியம் என்பது ஒரு ஆலமரமாக அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது. நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்திய தேசியம் மக்களிடைய வளர்த்தெடுக்கப்பட்டது. 67 ஆண்டுகளாக வலுகட்டாயமாக மக்களிடையே செயற்கையாக அது திணிக்கப்பட்டது. பள்ளிகள் முதற்கொண்டு, விளம்பரங்கள், தொலைக்காட்சிகள், கிரிக்கெட் விளையாட்டு, நாளிதழ்கள் , ஊடகங்கள், திரையரங்குகள், திரைப்படங்கள், வாகனங்கள், சாலைகள், அலைபேசி, இணையம் வரை எங்கும் எதிலும் இந்திய தேசியம் மக்களிடையே வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.

Tamilnaadu
இப்படி எல்லாவகையிலும் இந்திய தேசியம் திணிக்கப்பட்ட போதும் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறந்துவிடவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி, எல்லா மயக்கங்களையும் தாண்டி தாங்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை தமிழ்த் தேசிய இனமக்கள் இப்போது உணர்ந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியத்திற்கான எந்தவிதமான விளம்பரங்கள் இல்லாமல், ஊடக பலம் இல்லாமல், திரைப்படங்கள் இல்லாமல், கதாநாயகர்கள் இல்லாமல், கிரிக்கெட் நாயகர்கள் இல்லாமல், பொய்யை மட்டுமே பரப்பும் நாளிதழ்கள் துணை இல்லாமல், இனத்திற்கான ஒரு அரசு இல்லாமல் தமிழ்த் தேசியம் தமிழ் மக்களை சென்றடைந்துள்ளது என்றால் அது எவ்வளவு பெரிய வலிமையான கருத்தியல் கொண்டது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய உணர்வு இந்திய தேசிய உணர்வைப் போல செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையாக துளிர் விட்ட உண்மையான தேசிய இன உணர்வு. முகநூல் முழுவதும் இந்தியாவின் வரலாறு தெரியாமல், பிரச்சனைகள் தெரியாமல் இந்திய தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்திருக்கும் கோடான கோடி மக்களின் நடுவே தமிழ்த் தேசிய இன மக்கள் கறுப்புக் ஏந்தி இந்திய தேசிய சுதந்திர தினத்தை தமிழர்கள் நாங்கள் புறக்கணிக்கிறோம் என்ற செய்தியை உலகிற்கு துணிவுடன் சொல்கிறார்கள் என்றால் எப்படியான வீரமுள்ள அறிவுள்ள தமிழ்த் தேசியம் இங்கு இயற்கையாக மலர்ந்துள்ளது என்பதை நாம் காண முடிகிறது.

செயற்கை ஒரு நாள் வலுவிழந்து வீழ்ந்து விடும். இயற்கை நிச்சயம் வெல்லும் என்ற செய்தியுடன் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு நம் சிறப்பு வாழ்த்துகளை பகிர்கிறோம்! தமிழர்கள் நாம் வெல்வோம்!

இராஜ்குமார் பழனிச்சாமி.