புத்தாண்டின் விடுமுறைக் காலத்தை நெருங்கும் இவ்வேளையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவைப்பேரழிவுக்கு இட்டுச் சென்ற 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தந்த இழப்புகளின் வடு கனடியத்தமிழர் உள்ளங்களில் இன்றும் மாறாமல் இருக்கிறது.

டிசம்பர் 26ஆம் நாள் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமானமக்களைப் பலிகொண்ட இந்த ஆழிப்பேரலை இருபது இலட்சத்துக்கும் அதிகனோரை உடமைகள் இழந்து ஏதிலியராக்கியது. 10ஆவது ஆண்டை நினைவுகூருமுகமாக கனடியத் தமிழர் பேரவை ஏனைய குமுக அமைப்புகளோடு இணைந்து நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நாள்: Friday, December 26th, 2014 from 2:00 pm to 4 pm
இடம்: JC’s Banquet & Grill House
1686 Ellesmere Road,
Toronto, Ontario M1H 2V5

நுழைவு: கட்டணம் இல்லை.

பெரிதும் பாதிக்கப்பட்ட பல்லின மக்களை இணைத்து நினைவு கூரப்படும் இந்த முக்கிய நிகழ்வில் தங்களையும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.