அண்மையில் இலங்கை அகதிகள் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்த காரணத்தினால் அவர்களை நடுக் கடலில் வைத்து பெரிய அதிவேக படகுகள் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அகதிகளுக்காக செயற்படும் அமைப்பான[ Refugee Action Coalition Sydney] ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதன் செயற்பாட்டாளர் Ian Rintoul:

ian-australia
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான சமவுரிமை மற்றும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை.

தற்போதும் கடத்தல்கள் புலனாய்வு விசாரணைகள் என தமிழர்களுக்கு சரியான முறையில் இலங்கையில் பாதுகாப்பு இல்லை அதனால் தங்களது உயிரை பாதுகாக்கவே நாடு நாடாக இடம்பெயர் கின்றனர் .

அது மற்றும் இன்றி இலங்கையில் வாழ்வதற்கான உரிமை மறுக்கபட்டதால் தான் அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக சென்று இருந்தார்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்களை மீண்டும் இன படுகொலையளியான மகிந்தவிடம் ஒப்படைப்பது மாபெரும் தவறு என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 7 ம் திகதி சிட்னி யில் உள்ள குடிவரவு அலுவலகத்துக்கு முன்னால் சரியாக 12 மணியளவில் இடம்பெறவுள்ளதென தெரிவித்தார்.

http://www.refugeeaction.org.au/