Ltte-fighterதமிழினி பற்றியும் அவரது ஆளுமை பற்றியும், விடுதலை மீதான அவரது பற்றுறுதி பற்றியும், அவருடைய சோரம் போகா தீரம் பற்றியும், தன்னலம் இல்லா பண்பு பற்றியும் அவர் குடும்ப நிலை பற்றியும் இப்பொழுது எல்லோரும் குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

 

அவரை வஞ்சித்தவர்கள், புறஞ்சொன்னவர்கள், துரோகி என்றவர்கள்…

 

புலி ஆதரவாளர்கள், போலிப் போராளிகள், போலித் தமிழ்த் தேசியவாதிகள்….

 

புலி எதிர்ப்பாளர்கள், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள்….

 

முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள், சிந்தாந்தவாதிகள், கோட்பாட்டாளர்கள்…

 

இடதுகள்… வலதுகள்….

 

எனப் பல்வேறு தரப்பினர்!

 

உண்மையில் தமிழினி மரணத்தைக் கண்டு அஞ்சியிருக்க மாட்டார். அவர் மரணத்துக்குள் வாழ்ந்தவர். கடும் போரின் மத்தியிலும் உறுதியுடனும், இன்முகத்துடனும் அவர் தன் ஒவ்வொரு கடமையையும் ஆற்றி வந்த பண்பு அதற்கு ஆதாரம், சாட்சி!

 

அவர் உண்மையில் விரும்பியே மரணித்தார் என்று நான் சொல்வேன்.

 

அவரது வாழ்க்கையின் ஒவவொரு காலகட்டமும் அர்த்தமுள்ளதாகவே இருந்து வந்துள்ளது, எமது போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு தாக்கத்தை விளைவித்து வந்துள்ளன. அவ்வாறே அவரது மரணமும்!

 

போராளி வாழக்கை, புனர்வாழ்வு வாழ்க்கை, விடுதலையின் பின்னரான வாழக்கை, அவரது மௌனம்,

 

அமைதி, அவர் மௌனமாகப் பேசிய கவிதைகள், முகநூல் குறிப்புகள்… இறுதியாக அவரது மரணம்!

 

அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஒன்றாகக் கோர்த்து பார்த்த பின்னராவது,

 

போலித் தேசியவாதிகளும், பிழைப்புவாத அரசியல்வாதிகளும் விற்றுப் பிழைப்பதை நிறுத்துவாராக!

 

வீரம் பேசும் விசில் அடிச்சான் குஞ்சுககள் கொஞ்சம் நின்று நிதானமாக யோசிப்பார்களாக!

 

ஒத்தோடிகளாக இருந்து முற்போக்கு அரசியல் பேசும் போலிகள தம் மனச்சாட்சிகளை ஒருதரம் தொட்டுப் பார்ப்பாராக!

 

எல்லாவற்றுக்கும் மேலாக….

 

புலிகளுக்கு அரசியல் தெரியாது, சமூகம் தெரியாது, வர்க்க அரசியல் தெரியாது, பெண்விடுதலை தெரியாது அவர்களிடம் தத்துவம் இல்லை எனப் பறiசாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்த சாட்சியாக வாழ்நது, ஒரு செய்தியைச் சொல்லிச் சென்றுள்ளார் தமிழினி…

 

“எல்லாத் தத்துவமும் தெரிந்தே நாம் 30 வருடமாகப் போராடினோம்….

 

எலலாம் அறிந்தே முள்ளிவாய்க்காலில் மௌனிக்கவும் செய்தோம்…
எல்லாம் அறிந்தபடியே விட்டும் செல்கிறோம்…

 

புதிதாக நீங்கள் தொடங்க வேண்டியதொன்றும் இல்லை…
ஈழ தேசத்தின் புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு கட்டத்தை….

 

உங்களால் முடியவே முடியாத முதற்கட்டத்தை முடித்துவிட்டோம்…
இங்கிருந்தே தொடங்குங்கள்….”

 

கா.ஞானதாஸ்.