isaipriyaபிரித்தானியாவை மையமாக கொண்டியங்கும் சனல் 4 ஊடகம் அவ்வப்போது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்திவருகின்றது.

இந்நிலையில் இன்றும் ஒரு காணொளியினை வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறார் இசைப்பிரியா… அவரை நான்கு இராணுவத்தினர் வந்து அழைத்துச் செல்கின்றார்கள். அதில் ஒருவர் நீ பிரபாகரனின் மகள் தானே எனக் கேட்கிறார்…. அதற்கு இசைபிரியா ஐயோ… நான் இல்லை என்று மறுக்கிறார்.

இந்த ஒலிப்பதிவுகள் காணொளியில் தெளிவாக கேட்கின்றது.

பொதுநலவாய மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் சனல் 4 வெளியிட்டுள்ள புதிய காணொளி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 இற்கு இந்த காணொளி சனல்போர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

பின்வரும் இணைப்புக்களில் இந்த காணொளியை காணலாம்.

http://www.channel4.com/news/fate-of-tamil-actress-chilling-new-evidence-from-sri-lanka


காணொளியின் கூறும் தகவல்கள் வருமாறு:

தமிழீழத் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இசைப்பிரியா என்ற பெண்ணை சிங்கள இராணுவத்தினர் பலர் இணைந்து பொதுவான இடத்தில் பலர் முன்னிலையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொடூரமாக சித்திரவதை செய்த பின்னர் சுட்டு படுகொகொலை செய்துள்ளனர்.

பல சிங்கள இராணுவத்தினர் தமது கீழாடைகளுடனேயே நிற்கின்றனர்.

நீ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளா என இராணுவத்தினர் கேட்கின்றனர், அதற்கு அவர் இல்லை என கூறுகின்றார்.

இசைப்பிரியாவின் கைகள் பின்புறமாக பச்சை வயரினால் கட்டப்படுகின்றது.

அதன் பின்னர் நிர்வாணமாக இருந்த அவருக்கு மேலே போடுவதற்கு வெள்ளைத்துணியை பாலியில் வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவத்தினரே கொடுக்கின்றனர். அதனை பார்த்து மற்றவர்கள் சிரிக்கின்றனர்.

பின்னர் இசைப்பரியாவின் உள்ளாடைகள் அகற்றப்பட்டுள்ளது.

முகத்தில் வடியும் குருதி கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் துன்புறுத்தப்பட்டதை காட்டுகின்றது.
இறந்த பின்னரும் அவரை சில இராணுவத்தினர் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளர்.

சிங்கள இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்ட பல தமிழ் பெண்களுக்கு நேர்ந்தது இது தான்.

சிறீலங்கா இராணுவத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கோரமான படுகொலை ஆதாரங்கள் மலையென குவிந்துவரும் வேளையிலும், அனைத்துலக சமூகமும், இந்தியாவும் இணைந்து சிறீலங்காவின் போர்க்குற்றங்களை மறைத்து தமிழ் சமூகத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைப்பது தமிழகத்திலும், உலகிலும் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈழம் ஈ நியூஸ்.