இந்தியாவின் அழிவு தொடங்குகிறதா?

0
652

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹமூத் உட்பட பாகிஸ்தானிய இராணுவ உயரதிகாரிகள் குழு தற்போது சிறீலங்காவில் முகாமிட்டுள்ளனர்.

வடபகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்க பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது குறித்து முன்பே தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் நிமித்தமே சிறீலங்கா மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நீர்த்துப்போகச் செய்வதிலும், சிறீலங்கா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதிலும் மிகக் கடுமையாக பாகிஸ்தான் உழைத்ததாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2012 செப்டெம்பர் அளவில் யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் ஒரு கண்காணிப்பு நிலையத்தை அமைப்பதற்கு ராஜபக்ச அனுமதித்திருந்தார்.

mahi-paki
ஆனால் இது விசாகப்பட்டினம் கடற்படைத்தளத்தை இலக்கு வைத்து அமைக்கப்படுவதாகவும் இந்த நிலையத்தில் இருந்து இந்திய கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து ஒட்டுக் கேட்கவும் முடியும் என்று RAW அலறிப்படைத்து எச்சரித்ததன் விளைவாக இந்த முயற்சியை கைவிட வேண்டியேற்பட்டது.

ஆனால் அதற்கு பரிகாரமாக சிறீலங்கா இந்தியாவிடம் பல இராஜதந்திர உதவிகளை பெற்றுக்கொண்டது.

ஆனால் அது பழைய கதையாகிப் போய்விட்டது.

ஏனென்றால் மேற்குலகம் ஆட்சிமாற்ற கனவுடன் இலங்கையை சுற்றிவளைக்க தொடங்கியிருப்பதால் சீனாவின் ஆலோசனையுடன் பாகிஸ்தானுக்கு ஒரு கேந்திர முக்கியத்துவத்தை கொடுக்க சிங்களம் முற்படத் தொடங்கியதன் விளைவுதான் பாகிஸ்தானின் மறுபிரவேசம் ஆகும்.

இதனூடாக சிங்களம் இந்திய கொள்கை வகுப்பாளர்களைப் பெரும் இக்கட்டில் தள்ளிவிட்டுள்ளார்கள்.

பாகிஸ்தானுக்கு சிறீலங்காவில் கால்பதிக்கும் அனுமதியை மறுப்பதென்றால் முன்பைவிட தமிழின விரோதப் போக்கை கடைப்பிடித்து தமது இருப்பை தக்க வைக்கும் இராஜதந்திர உத்தரவாதங்களை பெற சிங்களம் முற்படுவதாகத் தெரிகிறது.

அது மட்டுமல்ல இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை உள்நுழைய அனுமதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கும் ஒரு மறைமுக எச்சரிக்கையை விடத் துணிந்திருக்கிறது சிங்களம்.

ஆனால் இது இந்தியாவிற்குத்தான் பெரும் பிராந்திய அச்சுறுத்தலாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய கடற்படைத் தளமான அந்தமான் தீவுகளை ஏற்கெனவே பர்மாவின் கொக்கோ தீவில் இருந்தும் வங்கதேசத்தின் சிட்டகாங்க் துறைமுகத்தில் இருந்தும் சீனா கண்காணித்து வருகிறது.

RAW ஏற்னவே எச்சரித்ததுபோல் பாகிஸ்தான் யாழப்பாணத்தில் கால்பதித்தால் விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் முற்றாக பாகிஸ்தானின் கண்காணிப்புக்கள் வந்துவிடும்.

ஏற்கனவே கிழக்கில் லஸ்கர்இதொய்பா மற்றும் வேறு சில முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் நடமாட்டம் இருப்பதாக விக்கிலீக்ஸ் ஆவணங்களினூடாக அறியக்கூடியதாக இருக்கிறது. இப்போது பாகிஸ்தான் உளவுத்துறையும்..

இதை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை.!

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தமிழீழம் என்ற நாட்டின் பிரராந்திய இருப்பையும் இந்தியசார் நலனையும் புரிந்து கொள்ளாமல் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புலிகளை அழித்ததற்கான பலனை இந்தியா அறுவடை செய்யும் காலம் நெருங்கிவருவதையே இது சுட்டிநிற்கிறது.

தலைவர் பிரபாகரன் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் தமிழ் ராஜதந்திரிகளுடனான ஒரு முக்கிய சந்திப்பின் போது குறிப்பிட்டது இது.

“நான் இந்தியாவை மட்டுமல்ல யாரையும் என்னையும் எனது இனத்தையும் மேய்க்க விட மாட்டேன். நாம் எமது சொந்த பலத்தில் சுயமாக இருக்க விரும்புகிறோம். நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல.. ஒரு வகையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவிற்கான காவலரண்கள் நாங்கள். ஏனென்றால் நாம் அமெரிக்காகவையோ சீனாஇ பாகிஸ்தான் உட்பட பிராந்திய வல்லரசுகளையோ தமிழீழத்தில் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் சிங்களம் அப்படியல்ல. நாம் அழிவோமாயின் அன்றிலிருந்து இந்தியாவின் அழிவும் தொடங்கிவிடும். இதை அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அனுபவித்து தெரிந்து கொள்ளட்டும்.”

ஈழம்ஈநியூஸ்.