narayananஇந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே . நாராயணனை தமிழகத்தில் நுழைய விட்டது தமிழக அரசின் தவறு. பிரபாகரனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் துடிக்கத் துடிக்க சிங்கள அரசால் கொல்லப்பட்டனர். இப்போரை நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே போராட்டம் நடத்தியது. பல தமிழர்கள் தங்கள் இன்னுயிரை நீத்து போரை நிறுத்த வலியுறுத்தினர் .

 

ஆனால் இந்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் சிங்கள அரசு இறுதிவரை போரை நிறுத்தாமல் மாபெரும் இனப்படுகொலையை அரங்கேற்றியது. இந்திய அரசின் சார்பில் எம்.கே. நாராயணன் அவ்வப்போது இலங்கை சென்று கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு ஆதரவு அளித்து வந்தார் . இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இந்திய அரசுக்கும் பெரும் பங்கு உள்ளது . இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலை சிறப்பாக முடித்து வைத்தவர் தான் இந்த எம்.கே . நாராயணன். இதை தமிழர்கள் யாரும் மறக்கவில்லை . தமிழர்கள் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக இந்நிகழ்வுகள் பதிவாகி உள்ளன .

 

இந்நிலையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்கு எம்.கே நாராயணன் வருகை தந்து இலங்கை அகதிகள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று உள்ளார் . இலங்கையில் இனப்படுகொலையை வெற்றிகரமாக நடத்த துணைநின்ற நாராயணன் துணிச்சலாக தமிழகத்திற்கு வந்து தமிழீழ அகதிகளை பற்றி பேசுகிறார் .

 

இதை தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும். எம். கே நாராயணனின் வருகை ஒட்டுமொத்த தமிழினத்தையும் புண்படுத்தும் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். நாளை ராஜபக்சே தமிழகம் வந்தாலும் தமிழ் மக்கள் தாக்குதலில் ஈடுபடத் தான் செய்வார்கள். இது இயற்கையானது தான். எம்.கே. நாராயணனை தாக்கிய தமிழர் பிரபாகரன் தன்னுடைய நியாயமான உணர்ச்சியைத் தான் வெளிபடுத்தி உள்ளது. ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்து வாடும் தமிழினம் இதைக் கூட செய்யாமல் இருக்காது .

 

இனப்படுகொலைக்கு துணைபோன ஒருவரை சென்னைக்கு அழைத்து பேச வைத்தால் தமிழர்கள் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவரை செருப்பால் தாக்கி தனது நியாயமான கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் பிரபாகரன்.

 

ஆகவே , தமிழக அரசு தமிழர் தரப்பில் இருந்து சிந்தித்து , இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடக்காத வண்ணம் , இனப்படுகொலைக்கு துணை போனவர்களை தமிழகம் வந்து பேச அனுமதி தரக்கூடாது. மேலும் உணர்ச்சி மிகுதியால் தனது கோபத்தை வெளிப்படுத்திய தமிழர் பிரபாகரனுக்கு எந்த வித துன்பமும் கொடுக்காமல் அவரை விடுதலை செய்ய வேண்டும் , அவர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.