kashmeer-3இந்திய ஆக்கிரமிப்பின் கோர முகத்தை முழுமையாக அனுபவித்து கண் முன் பார்த்த ஈழத்து தமிழ் மக்கள் நாங்கள். காஸ்மீரில் அப்பாவி மக்கள் படும் கோரமான துயரின் கொடுமையை தொலைவில் இருந்தே என்னால் உணர முடிகின்றது.

 

இந்திய ஆக்கிரமிப்பில் எம் தமிழ் பெண்கள் ஈழத்தில் அனுபவித்த கொடுமையை இரத்தமும் சதையுமாக நெருப்பு நினைவில் நிறுத்தி இதோ இப்பொழுது எம் காஸ்மீரிய சகோதரிகள் எத்தகைய கொடுமைகளை மிருக தாக்குதல்களை அனுபவிப்பார்கள் என உணர முடிகின்றது.

 

அன்பு காஸ்மீரிய சகோதரிகளே… உங்களுக்காக கண்ணீரை மட்டுமே சிந்த முடியும் வல்லமை இல்லா மக்களாக தமிழ் மக்கள் நாங்கள் இருப்பதை இட்டும் அதையும் செய்ய மறுக்கும் ஈனத்தனமான சில மிருகங்கள் தம்மை தமிழர் என சொல்லும் இழி பிறப்புகளாக எம்முள் இருப்பதையிட்டும் எண்ணி வெட்கப்படுகிறேன்.

 

ஒரு பொழுதும் இந்திய இராணுவத்தை நியாயப்படுத்துபவர்கள் இதயம் உள்ள கருணை, அன்பு, நீதி நிறைந்த பகுத்தறியும் சிந்தை கொண்ட தமிழ் மக்களாக இருக்க முடியாது.

 

வலி என்றால் என்ன என இவர்களுக்கு எங்கு தெரிய போகின்றது. இந்தியத்தின் வஞ்சனையில் இன்று காஸ்மீரில் கண்ணீரும் செந்நீரும் ஓடுகின்றது.

 

எதேச்சை அதிகாரத்தோடு இந்தியா ஆடும் ஆதிக்க தாண்டவமும் வெறியாட்டமும் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! அப்பாவி காஸ்மீரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
.
காஸ்மீரில் கதறும் ஒவ்வொரு பெண்ணின் கதறிலிலும் இந்தியதால் சீரழிக்கப்பட்டு செத்து மடிந்த என் தமிழ் சகோதரிகள் கதறல் ஒலி கேட்கின்றது!

 

தமிழ் தலைவர்கள் தான் சந்தர்ப்பவாதிகள் என்றால் தமிழ் மக்களின் தாய்மை உள்ளம் ஏன் கல்லாகி கிடக்கிறது இந்த அநீதிகளை தட்டிக் கேட்டு கண்டிக்க முன்வராமல்?

 

உண்மையான மக்கள் போராட்டங்களுக்காக குரல் கொடுப்பது இதயம் உள்ள ஒவ்வொரு மாந்தர்களதும் கடனாகும்!

 

மக்களுக்காக குரல் கொடுக்கும் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் என சொல்லும் அரச பயங்கரவாதத்திற்கு இரையாகும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

 

செந்தமிழினி பிரபாகரன்