இந்திய – தமிழக அரசுகளின் அரச பயங்கரவாதம் கண்டனத்திற்குரியது

0
846

தமிழ் மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்திய மத்திய அரசினதும், அதன் கைப்பாவையான தமிழக அரசினதும் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக மக்களும், மாணவர்களும் இணைந்து உலகத் தமிழ் மக்களின் ஆதரவுடன் மேற்கொண்ட அமைதிவழிப் போராட்டத்தை இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வன்முறை வழியில் சிதைத்துள்ளதானது மிகவும் கண்டனத்திற்குரியது.

 

 

உலகின் நாடுகளின் காவல்த்துறைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழ்த்தரமான காவல்துறையாக கருதப்படும் தமிழக காவல்துறையினரின் இந்த நடைவடிக்கையானது தமிழ் மக்களின் அமைதிவழியிலான போரட்டப்பாதைக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகும். எதிர்வரும் காலங்களில் தமிழ் இனம் தனது போராட்டப் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய சம்பவத்தின் கருத்து.

 
ஈழத்தில் சிங்கள காவல்துறையினரும், இராணுவத்தினரும் எவ்வாறு தமிழ் மக்களின் அமைதியான போராட்டங்களின் மீது வன்முறைகளை ஏவினார்களோ அதனைவிட மோசமான நடைவடிக்கையை தமிக காவல்த்துறை மேற்கொண்டதனை உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்பதுடன், மேற்குலக நாடுகளில் உள்ளது போன்று இந்திய நீதித்துறையும், காவல்த்துறையும் முற்றுமுழுதாக சுயாதீன அமைப்பாக கொண்டுவரப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை நாம் முன்வைக்க வேண்டும்.

 
அது மட்டுமல்லாது தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதுடன், அதிகாரங்களை மீறிய காவல்துறையினர் மீது கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை கொண்டு நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.

 
இந்திய மற்றும் தமிழக அரசுகளின் ஒடுக்குமுறைக்குள் வாழும் தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை அனைத்துலக சமூகத்திடமும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாகவும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

 
அதன் மூலம் தான் இந்திய ஒன்றியத்தில் வாழும் பல சமூக மக்கள் எவ்வாறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை நாம் அனைத்துலக சமூகத்திற்கு காண்பிப்பதுடன், சோவித்து ஒன்றியம் என்ற ஒடுக்குமுறை தேசத்தில் இருந்து பல இனங்கள் சுதந்தியம் பெற்றது போன்ற ஒரு நிலையை அந்த மக்கள் எட்ட முடியும்.

 
அது மட்டுமல்லாது எதிர்வரும் 26 ஆம் நாள் இடம்பெறவுள்ள இந்திய குடியரசு தினத்தை உலகில் உள்ள அத்தனை தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்ற உறுதியை நாம் எட்டவேண்டும். தமிழக மக்கள் தமது முழுமையான சுதந்திரத்துடன் வாழும் நிலை ஏற்படும் வரை ஒவ்வொரு தமிழ் மகனும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.

 
1978 ஆம் ஆண்டு யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் போது சிங்கள இராணுவம் தமிழ் இனத்தின் இன விழுமியங்களை சிதைக்கும் நோக்கத்துடன் மேற்கொண்ட வன்முறையை போன்றதே தமிழக காவல்துறையினரின் வன்முறையாகும் என்பதுடன், தமிழக மற்றும் இந்திய அரசுகளின் இந்த திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தை ஈழம்ஈநியூஸ் வன்மையாக கண்டிப்பதுடன், தமது இனத்தின் கலாச்சாரத்தை காப்பாற்ற இறுதிவரை நின்று போராடிய மாணவர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 

ஈழம் ஈ நியூஸ்.