பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது ஈழவிடுதலையை மேலும் சிக்கலுக்குரியதாக்கிவிட்டது.

இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் நிகழாமல் ஈழவிடுதலை என்பது சாத்தியமில்லாத ஒன்று..

தமிழர்களுக்கு எதிரான வழமையான வெளியுறவுக்கொள்கையை தேசியக்கட்சிகளை புறந்தள்ளிய அந்தந்த மாநில கட்சிகள் வென்று கூட்டணி அமைத்து டெல்லியில் அமைக்கும் ஆட்சியே மாற்றியமைக்கும்.. மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெளியுறவுக்கொள்கையை தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் கொள்கைவகுப்பாளர்களுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும்.

Narendra Modi mask held by supporters celebrating BJP victory in Gujarat elections in Ahmedabad
சட்டமன்ற தீர்மானங்கள் தொடக்கம் மீனவர் பிரச்சினைவரை சாதகமான விளைவுகளை இதன் வழி தமிழர்தரப்பு பெற்றிருக்கலாம்.

அதைத்தான் நாம் நம்பியிருந்தோம்..

ஜெயலலிதா பெரும்பான்மை வெற்றியை பெறுவார் என்ற நமது கணிப்பு பொயக்கவில்லை. டெல்லியின் தலைமையாகவோ அல்லது அதைத் தீர்மானிக்கும் ஒரு பெரும் சக்தியாகவோ ஜெயலலிதா இருப்பார் என்ற நமது கணிப்பை மோடியின் அசுர வெற்றி தகர்த்துவிட்டது.

ஒருகாலத்தில் பாஜக அரசை பத்து நாளில் கவிழ்த்த வரலாறு எல்லாம் ஜெயலலிதாவிற்கு இருக்கிறது

விளைவாக, தனித்து ஆட்சியமைக்கும் பாஜக என்ற தேசியக்கட்சியை வைத்து தாம்விரும்பியபடி கொள்கை வகுப்பாக்கத்தை வரைந்து ஈழவிடுதலையை மேலும் ஐந்து வருடத்திற்கு தடுக்கப்போகிறது இந்திய அதிகாரவர்க்கம். இதைத் தடுக்கும் எந்த கடிவாளமும் தமிழர் தரப்பிடம் இல்லை.

எனவே நாம் எமது போராட்டவழிமுறைகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.

தமிழகமும் தாயகமும் புலமும் இணைந்த ஒரு தமிழ் வெளியுறவுக்கொள்கையை வரைந்து இந்த பிராந்திய பகடையாட்டத்தை நாம் எதிர்கொள்ளவேண்டும்.

இல்லையேல் ஈழவிடுதலை மேலும் சிக்கலுக்குரியதாகவிடும்.

ஈழம்ஈநியூஸ்.