இந்திய “நீதி”..

0
744

Devyani-Khobragade-Indian-Foreign-Serviceநியூயோர்க்கில் இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள துணைத் தூதர் தேவயானி கோப்ராகடே விடயத்தில் உலகளவில் மீண்டும் ஒரு முறை இந்தியாவின் மோசடி முகம் அம்பலப்பட்டிருக்கிறது.

தனது வீட்டில் பணிபுரிவதற்காக ஒரு இந்திய பெண்ணை வேலைநேரம் மற்றும் ஊதியம் தொடர்பான போலி தகவல்களை சமர்ப்பித்து ராஜீய அந்தஸ்தில் அமெரிக்க விசா எடுத்து கூட்டிசென்று அந்த பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்கா காவல்துறையால் தேவயானி கைது செய்யப்பட்டதற்கு இந்தியா இன்று போர்க்கோலம் பூண்டுநிற்கிறது.

இந்தியாவின் இந்த இரட்டை வேடம் உலக மனிதஉரிமையாளர்களையும் மனிதநேய அமைப்புக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தவறு செய்த தேவயானியை பணியிலிருந்து நீக்கி இந்தியாவிற்கு திருப்பி அழைத்து தண்டனையை வழங்க வேண்டிய இந்தியா மாறாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணையும் அவரது குடும்பத்தையும் குற்றவாளிகளாக்கியது மட்டுமல்ல தேவயானிக்கான சட்ட பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா அவரை ஐநா மன்ற இந்திய தூதரகப் பிரதிநிதியாக நியமித்திருப்பது இந்திய “நீதி” யை உலகில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்திய அரசியல்வாதிகளுக்கும், பணமுதலைகளுக்கும், இந்திய பார்ப்பனீய அதிகார வாக்கத்திற்கும் முன்னால் சக இந்திய மக்கள் தினம் தினம் சூiறாயாடப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய நீதியை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு சம்பவம் இது.

அமெரிக்க அரசோ – அதிகார வர்க்கமோ ஒன்றும் யோக்கியர்கள் கிடையாது. ஆனால் இந்த சம்பவத்தில் அமெரிக்க காவல்துறை மிக நேர்மையாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் நின்று இந்த வழக்கை கையாண்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து தேவயானியும் இந்திய அதிகாரவர்க்கமும் பொய்களை புனைந்தபடியே இருக்கிறார்கள்.

தேவயானி கோபர்கடேயைக் கைது செய்ய உத்தரவிட்ட அமெரிக்க நீதித்துறை அரச வழக்கறிஞர் ப்ரீத் பராரா “ஒரு இந்தியர் நடத்தப்பட்ட விதம் என்று கூறப்படும் இது குறித்து எழுந்திருக்கும் கோபாவேசம் மற்றொரு இந்தியரும் ( பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ்) அவரது கணவரும் நடத்தப்பட்ட விதம் குறித்து எழவில்லை என்பது வியப்பாக இருக்கிறது ” என்று அதிர்ந்துபோய் ஒரு அறிக்கையை விடுத்திருக்கிறார்.

india-cashmir
அவரை மட்டுமல்ல உலகையே இந்தியாவின் இந்த போக்கு அதிர்ச்சியுற செய்திருக்கிறது.

ஒடுக்கப்பட்டமக்கள், போராடும் மக்கள் தொடர்பான இந்திய நீதி நாம் அறியாததல்ல. சாதிக்கு ஒரு நீதியும், மதத்திற்கு ஒரு நீதியும் முன்வைக்கும் இந்தியத்தின் நீதியும் நாம் அறியாததல்ல.

தமது சொந்த மக்களை பலிகொடுத்தாவது, தமது அதிகாரவர்க்கத்தை காப்பாற்றும் இந்தியாவின் அயோக்கியத்தனம் உலகளவில் அம்பலப்பட்டதுகூட தெரியாமல் தொடைதட்டி நிற்கிறது இந்தியம்.

பாவம் இந்திய மக்கள். இந்திய ஊழல் அரசியல்வாதிகளுக்கும், பணமுதலைகளுக்கும், இந்திய பார்ப்பனீய அதிகார வாக்கத்தினதும் “நீதி” க்குள் சிக்கியுள்ள அவர்களை மீட்க எந்த மீட்பர் வரப்போகிறாரோ தெரியாது.!

குற்றம் இழைத்த தேவயானிக்கு பதவியுர்வை பரிசாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணான சங்கீதாவிற்கு களியையும், கம்பிகளையும் பரிசாக அளிக்க திரண்டு நிற்கிறது இந்தியம்.

வாழ்க இந்தியா.. வாழ்க ஜனநாயகம்…

ஈழம்ஈநியூஸ்