இந்திய பிரதமரே திரும்பிப் போ” என்று முழங்கிய வைகோ உள்ளிட்ட பலர் கைது

0
704

vaiko9இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில்  (02) பிரதமர் வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தி, வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது பேசிய வைகோ, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதன் மூலம் 53 நாடுகளின் தலைவராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது.

ஒரு வேளை இந்தியா பங்கேற்றால், இவ்வளவு நாள் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகப் போய்விடும் என்பதால், நாங்கள் “பாரதப் பிரதமரே திரும்பிப் போ” என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளோம் என்று கூறினார்.

இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், பொதுவுடைமை கட்சித் தலைவர் அய்யா மணியரசன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

தமிழீழத் தமிழர்களை சிங்கள பேரினவாத அரசு கொன்று குவிக்கவும், காவிரி – முல்லைப் பெரியாறு – கூடங்குளம் – தமிழக மீனவர் சிக்கல் என தமிழகத் தமிழர்களின் உரிமைப் பறிப்புகளைக் கண்டுகொள்ளாமலும் உள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி விமான நிலைய சாலையில் கறுப்புக் கொடி காட்ட முயன்ற, à®®.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டியில், பெல் பவர் பிளாண்ட் பைப்பிங் யூனிட் என்ற பாய்லர் ஆலையை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலையில் திருச்சி வந்தார். மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த, ம.தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ தலைமையில் இன்று காலை நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த் தேசயப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி.வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு. ராமகிருஷ்ணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள் மற்றும் தோழர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், மகளிர் ஆயம் தோழர் ம.லெட்சுமி, தஞ்சை நகரச் செயலாலர் தோழர் இரா.சு.முனியாண்டி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு, தோழர்கள் ஆத்மநாதன், ஆரோக்கியசாமி, தமிழக மாணவர் முன்னணி தோழர் மணிகண்டன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு கைதாகியுள்ளனர்.