pfltஇந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு பிரித்தானியாவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் மக்ககள் முன்னணி (PFLT UK) கடிதம் எழுதியுள்ளது. அதில் இந்திய நாடாளமன்ற தேர்தலில் அவரின் வெற்றிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை தீவில் சிங்கள பௌத்த பேரினவாத அரசபயங்கரவாதத்தால் இன்னலுறும் தமிழ்த்தேசிய மக்களுக்கு ஒரே அரசியல் தீர்வு தமிழீழம் தான் என்றும், அதற்கான வரலாற்றுக் காரணங்களச் சுருக்கமாக விளக்கி எழுதியுள்ளனர்.

மேலும் தமிழீழம் தொடர்பாக முடிவுகள் எடுக்கும்போது தமிழக முதல்அமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடன் இந்திய அரசாங்கம் கலந்தாலோசனை செய்து செயற்படவேண்டுமென வேண்டிக்கொண்டுள்ளார்கள்.
pmletter1-001pmletter2-001-182x300