இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் நோக்கில் நீண்டகாலமாக இலங்கையில் செயற்படும் அரசுசாரா நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் அரச கைக்கூலி நிறுவனமான “மார்கா” ( Marga Institute) உம் இன்னொரு சிங்கள சார்பு வலையமைப்பான CHO ( Consortium of Humanitarian Agencies) உம் இணைந்து “Issues of Truth and Accountability”- The last stages of the war in Sri Lanka என்ற பெயரில் இறுதி இனஅழிப்பை போர்க்குற்றமாகவும் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும் சுருக்கி புலிகளை முழுக்குற்றாளிகளாகவும் ஐநா வை துணைக்குற்றாளிகளாகவுமாக்கி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

Markar-UN
ஐநா விசாரணைக்குழுவின் செயற்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் அல்லது நீர்த்துப் போக செய்யும் நோக்கத்திலும் நடந்த இனஅழிப்பை மறைக்கும் நோக்கிலும் சிங்களம் மிக நுட்பமாகக் காய் நகர்த்திக்கொண்டிருப்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

ஆனால் தமிழர் தரப்பிலிருந்து நீதிக்கான எந்த இராஜதந்திர முன்னெப்புக்களையும் காணமுடியவில்லை.

அத்தோடு தமிழ் ஊடகங்கள் இந்த அறிக்கையின் சாராம்சத்தையும் நோக்கத்தையும் கூட விளங்கிக்கொள்ள முடியாமல் இந்த அறிக்கையைக் காவும் அபத்தமும் அரங்கேறிக்கொண்டிருப்பதுதான் கொடுமை.

UN-Rajeeva
இந்த அறிக்கiயின் பின்னணியில் இருந்த Godfrey Gunatilleke, Jeevan Thiagarajah , Asoka Gunawardena போன்றவர்கள் குறித்து தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் ராஜீவ விஜேசிங்க, தாமரா குணநாயகம், தாயான் ஜயதிலக போன்றவர்கள் குறித்துக்கூடவா நமது ஊடகங்களுக்கு தெரியாது.

இவர்களையும் இன்னும் சில இனவாதிகளையும் வைத்துத்தான் அவர்கள் (Marga Institute and the Consortium of Humanitarian Agencies) தமது அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதுவே நடக்கும் சதியையும் இதன் குருரமான பின்னணியையும் அறிய போதுமானது.

தமிழர் தரப்பு எப்போதுதான் விழத்துக்கொள்ளப்போகிறது.?

ஈழம்ஈநியூஸ்.