இனஅழிப்பு துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்திற்கு எதிராக தமிழ் அறிவுச்சூழல் அணிதிரள வேண்டும்!

0
684

பல்கலைக்கழகம் என்பது ஒரு இனத்தின் உளவியலை – உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் இடமாக இருக்கிறது.

2009 மே 18 இற்கு பிறகு வருடா வருடம் ஒவ்வொரு மே 18 மற்றும் நவம்பர் 27 அன்று யாழ் பல்கலை மாணவர்கள் ஏற்றும் ஒரு ஒற்றைத் தீபத்தினூடாக ஒட்டு மொத்த இனத்தின் அரசியலை – அவாவை உலகிற்கு எடுத்தியம்பி வருவதுதான் மாணவர்கள் செய்து வரும் ஒரே பணி.
அவர்கள் வேறு எந்த போராட்டமும் செய்வதில்லை.. அந்த ஒற்றை தீபங்களே அனைத்து செய்திகளையும் எழுதி விடுகிறது.

vasanthi
அந்த ஒற்றைத் தீபம் சிங்களத்தின் வெற்றியை மமதையை இன்ன பிற இன அழிப்பு கூறுகள் எல்லாவற்றையும் வருடா வருடம் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது.

சிங்களம் இன்று சீற்றமடைந்திருப்பதற்கு ஒரே காரணம் இதுதான். இந்த உண்மையை சிங்களத்தால் ஏற்கமுடியவில்லை. அதுதான் அந்த செய்தியை சொல்லும் மாணவர்களை பழிவாங்குவதுடன் இந்த முறை தமது அரசியலை மாணவர்கள் ஊடக தமிழர்கள் எழுதிவிடக்கூடாது என்ற முனைப்பில் சிங்களம் ஓடித்திரிகிறது.

மாணவர்களை அடக்குவது மட்டுமல்ல அவர்களை கண்டு பயங்கொள்ளும் போதே ஒரு அரசின் தோல்வி எழுதப்பட்டு விட்டது.

இனி தீபம் ஏற்றுவதென்பது ஒரு சடங்குதான்..அது ஏற்றப்படாவிட்டாலும் கூட இந்த தடையினூடாக பல்கலை மாணவர்களை வைத்து தமது அரசியல் செய்தியை தமிழினம் இந்த முறையும் உலகிற்கு சொல்லிவிட்டது.

பல்கலைகக்கழக தடையினூடாக ஒரு மக்கள் புரட்சிக்கான – மாணவர் புரட்சிக்கான ஒரு விதையை சிங்களம் விதைத்திருப்பதாகவே கொள்ளலாம். அதே போல் சிங்களம் தற்போது செய்யும் கைதுகளும் அச்சுறுத்தல்களும் புலிப்பூச்சாண்டிகளும் ஒரு மக்கள் – மாணவர் புரட்சியை எப்படி அடக்குவது என்பதற்கான ஒத்திகைகளே… ஆனால் இது எத்தனை நாளைக்கு?

தொடரும் அடக்குமுறைகள் ஒரு நாள் நிரந்தரப்புரட்சியாக மாறும். மாணவர்கள், மக்கள், பேராசிரியர்கள், அறிவுஜீவிகள்;,தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக வீதிக்கு வரும்போது இன அழிப்பு அரசு முழமையாகச் செயலிழக்கும்.
அதை வரலாறு எழுதும்.

ஆனால் எமது கவலையெல்லாம் தமிழர் கல்வியின் ஆதாரமாக மட்டுமல்ல தமிழர் பண்பாட்:டின் உறைவிடமாய் தமிழ் இறைமையின் தன்மானத்தின் குறியீடாய் இருக்கும் யாழ் பல்கைலயை இன அழிப்பு அரசிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தாரை வார்த்து யாழ் பல்லைக்கழகத்தை இராணுவமயமாக்கி தமிழ் இனஅழிப்பின் மையமாக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் அதை மாற்றியதுதான்..

“மாணவர்கள் அரசியல் நீக்கம்செய்யப்பட்டவர்கள”; என்று உளறும் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் இதனூடாக “பல்கலைக்கழகம்” என்பதன் பொருளையே திரிக்கும் புரட்டில் இறங்கியிருக்கிறார்.

“மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற யாழ் பல்கலை தாரக மந்திரத்தை ” இனஅழிப்பு அரசிற்கு அடங்கி நடப்பதே அறிவு” என்று மாற்றியமைத்திருக்கிறார்.

பாரிய இனஅழிப்பை சந்தித்து தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்குள் சிக்கி நிற்கும் தமிழனித்தின் பிரதிநிதிகளான மாணவர்களை வெறும் புத்தக பூச்சிகளாக மாற்றி தட்டையான எந்த அரசியல் விமர்சனமுமற்ற ஒரு தமிழ் தலைமுறையை உற்பத்தி செய்ய புறப்பட்டிருக்கிறார் வசந்தி அரசரத்தினம்.

இந்த வகையிலான ஒரு கல்வி முறைதான் போதிக்கப்படுகிறது என்றால் யாழ் பல்கலையை ஒருவாரம் அல்ல, நிரந்தரமாகவே மூடிவிடலாம். எந்த பொல்லாப்பும் இல்லை..

சமூகத்திற்கு முன்மாதிரியான மனிதர்களை உருவாக்குவதுதான் பல்கலைக்கழகத்தின் வேலையே ஒழிய “ரோபோக்களை” உருவாக்குவதல்ல..

தமிழ் அறிவுச்சூழல் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. பலகலைக்கழகம் இராணுவமயமாவதென்பது அரசியல் பிரச்சினை என்பதற்கும் அப்பால் தமிழ் தலைமுறையின் கல்வி மீது அறிவு மீது செலுத்தப்படும் வன்முறை இது.

உடனடியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் அறிவுஜீவிகள், அறிஞர்கள், பேராசிரியர்கள் ஒன்று திரண்டு துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்தின் இந்த அயோக்கியத்தனத்தை கண்டிக்க முன்வர வேண்டும்.

இனஅழிப்பு அரசிடமிருந்து பல்கலையை மீட்பதனூடாக தமிழ் அறிவுச்சூழலையும் தமிழ் வாழ்வையும் மீட்போம்.

ஈழம்ஈநியூஸ்.