இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களில் திருப்பதி நோக்கி சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆந்திர எல்லையில்தடுத்து நிறுத்தம்- ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டம்!!

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவதற்காக நூற்றுக் கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் சென்ற போது ஆந்திரா எல்லையில் அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

mahi-thiru
இதற்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் கூட்டமைப்பின் தலைவர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் நடத்திய சாலை மறியலால் தமிழகம்- ஆந்திரா இடையேயான போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு பகுதிகளிலும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த சாலை மறியல் போராட்டம் ஒரு மணிநேரம் நீடித்தது.

இந்தப் போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ், தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி, தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு தோழர்களும் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின் போது கொடுங்கோலன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.