நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழ் கிறித்தவர்கள் குறி வைக்கப்பட்டுள்ளார்கள்!

சிங்கள கிறித்தவர்களும் பலியாகி உள்ளார்கள்!

வேற்றின மக்களும் பலியாகி உள்ளார்கள்!

ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு இதில் வலி இல்லை…

இஸ்லாமிய மக்கள் ஒட்டுமொத்த இலங்கை மக்களினால் வெறுத்தொதுக்க குறி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்!

மொத்தத்தில் முள்ளியாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டும் தமிழ் மக்களின் போராட்டம் மே 18 , 2019 தனது 10 ஆம் ஆண்டு நினைவெழுச்சியை உலகின் கவனத்தை ஈர்க்க பேரெழுச்சியோடு நிகழ்த்த உள்ள நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது!

 

சிறிலங்கா அரசை இனப்படுகொலையாளிகளாக பார்த்த நாடுகளிடம் இன்று “சிறிலங்காவுக்காக பிரார்த்தியுங்கள்!” என அனுதாப அலை எழுப்பப்பட்டுள்ளது!

 

ஓரிரு நாட்களுக்குள் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்த இனப்படுகொலை அரசு தப்பித்து கொண்டு மாந்த நேயம் பேசும் அரசு என போற்றப்படுகின்றது!

 

உலகமும் உறுதுணையாக தாம் இருக்கின்றோம் என நேசக்கரம் நீட்டுகின்றன!

சிறிலங்காவில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

கொழும்பில் அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

“தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டே வந்தது.48 மணி நேரத்துக்கு முன்னதாகவும், தாக்குதல்கள் நடப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவும் கூட எச்சரிக்கை செய்யப்பட்டது.

 

ஏப்ரல் 4ஆம் நாள் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புள்ளதாக, முதல் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

 

குறிப்பாக, கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்கள், விடுதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் அந்த புலனாய்வுத் தகவல்கள் எச்சரித்திருந்தன.

 

பெயர்களை குறிப்பிட்டு கூட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அரசு பாராமுகமாக இருந்தது ஏன்? இதை கேட்க இன்று யாரும் இல்லை!

 

அதற்குப் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், பாதுகாப்புச் செயலரின் சார்பில், ஏப்ரல் 9ஆமு் நாள், இதுபற்றி காவல்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

 

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் உறுப்பினர்களான சிலரது பெயரையும் குறிப்பிட்டு, தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

 

தௌஹீத் ஜமாத் தலைவர்களான ஷரான் ஹஷ்மி, ஜல்ஹால் ஹிடால், சஜிட் மௌலவி, ஷல்ஹான், ஆகியோர் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்காக சிறிலங்கா வந்துள்ளனர் என்றும் அவர் தகவல் தெரிவித்திருந்தார்.

 

ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட அரசு முயற்சி கூட எடுக்கவில்லையே ஏன்?

 

இதை யாரவது கேட்கின்றீர்களா?

 

“இதற்கு அரசு பொறுப்பு கூற வேண்டும்!’ என போராட வேண்டிய நாம் ..

 

அரசை தப்ப விட்டுவிட்டு சக இனத்தை மிக இழிவாக திட்டுகின்றோம்!

 

இதில் சிறும்பான்மை இனங்கள் அரசின் விருப்பு போல் தொடர்ந்தும் பிரிக்கப்பட்டு இருக்க போகிறது என்கின்ற அபாயத்தை புரிந்து கொள்ளுங்கள்!

 

கொலையாளிகள் எந்த மதம்.. எந்த இனம் என்றாலும் கண்டியுங்கள்!

 

ஆனால் அவர்கள் எந்த மத பின்னணி என பார்த்து ஒட்டுமொத்த இனத்தையும் அந்த மதம் சார் மக்களையும் எதிர்ப்பதை தவிருங்கள்!

 

இந்த குண்டு தாக்குதல்களை இனவெறி மதவெறி வளர்க்க பயன்படுத்துவதை கடந்து இதன் பின்னால் யார் உள்ளார்கள் என தேடுங்கள்!

 

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரேன்ட் ஹொட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய இரண்டு பேரின் தந்தையான,கைது செய்யப்பட்டுள்ள செல்வந்த வர்த்தகரான 65 வயதான அல்ஹாஜ் யூசுப் மொஹமட் இப்ராஹிம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என தெரியவந்துள்ளது.

 

இதனிடையே சந்தேக நபரான மொஹமட் இப்ராஹிமின் இளைய புதல்வரான இஸ்மையில் அஹமட் இப்ராஹிம் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹொட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தியது இப்ராஹிமின் இரண்டு மகன்களான இம்சான் அஹமட் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் என தெரியவந்துள்ளது.

 

இஜாஸ் அஹமட் இப்ராஹிம் என்பவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

தெமட்டகொட மஹவில வீதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டை சோதனையிட்ட போது இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

 

தாக்குதல் செய்தவர்கள் இஸ்லாமியர்களாகலாம். அதற்காக அனைத்து இஸ்லாமியர்களும் கொலை வெறியர் என பார்த்து வெறுப்பது தவறு.

 

எம்மில் காட்டி கொடுத்த தமிழர்கள் எத்தனை…

 

அரசோடு இன்றும் கூட்டி கொடுத்து தமிழினத்தை அடகு வைக்கும் தமிழர்கள் எத்தனை ..

 

அதற்காக “தமிழர்களே தவறானவர்கள்!” என சொல்லலாமா?

 

இதில் இனப்படுகொலையாளி மகிந்தாவுக்கும் கூட தொடர்பு இருக்கலாம்.

 

‘இல்லை’ என்பதற்கு மகிந்த ஒன்றும் புத்தரின் பிள்ளை அல்லவே?

 

எத்தனை ஆயிரம் குழந்தைகளை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்த கொலையாளிகள் சிறிலங்கா அரசும் அரச படைகளும்…

 

தமிழர் நாமும் உலக நாடுகளும் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளை மறந்து இஸ்லாமியர்களை வெறுக்க வேண்டும். அரசின் புகழ் பாட வேண்டும். இதை தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

 

கடந்த காலத்தில் பல இஸ்லாமிய தமிழ் சகோதரர்கள் செய்த தவறை இதர தமிழர்கள் நாம் செய்யாமல் தெளிவாக சிந்திப்போம். தெளிவாக பயணிப்போம்!

 

இலங்கை அரசின் பின்னணி உதவி இன்றி இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்திருக்க முடியாது என்பதும் …

 

இந்தியாவால் கூட 3 நாட்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டும் அரசு வேண்டுமென்றே பாராமுகமாக இருந்த அநீதியின் சூழ்ச்சியால் இந்த படுகொலையாளிகள் இலங்கைக்குள் ஊடுருவி இத்தகைய படுகொலையை செய்ய முதன்மை காரணம் என்பதையும்…

 

இதுவும் கூட மானிட படுகொலை மட்டுமன்றி தமிழினப்படுகொலையின் தொடர்ச்சியே என்றும்…

 

நாம் புரிந்து கொள்ளாவிட்டால் இதுவரை காலமும் போராடிய எம் போராட்டம் திசை மாறும் கொடுமை நிகழ்வதை நாம் தடுத்து நிறுத்த முடியாது!!!

 

நன்றி:சிவந்தினி