இனப்படுகொலை புரிந்த மஹிந்த ராஜபக்ஷவை மிருகம் என கூறுவதே தவறு – ஜஸ்வந் சிங்கா

0
625

இனப்படுகொலை புரிந்த மஹிந்த ராஜபக்ஷவை மிருகம் என கூறுவதே தவறு என இந்தியாவின் முந்நாள் நிதி அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான ஜஸ்வந் சிங்கா ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நாடுகளினதும் தலைவர்களினதும் கவனத்தை ஈழத் தமிழர்களின் பாற் கொண்டு வருவதுடன் இலங்கை மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தும் முயற்சியியல் தீவிரம் காட்டிவரும் பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியாவில் பல முக்கிய அரசியற் கட்சித் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இராஜதந்திர ரீதியாக பல மட்டங்களிலும் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும்; முந்நாள் நிதி அமைச்சருமான ஜஸ்வந் சிங்காவுடனும் பல கட்டப் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜஸ்வந் சிங்கா குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் மனித உரிமை குறித்து; விழிப்புணர்வை வெளிக்காட்டுவதற்காக மாத்திரமே தாம் இம்முறை சென்னை விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து அதனூடாக தாம் நிகழ்வில் பேசிய விடயங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்திய அவரின் கருத்துக்கள் உணர்வு பூர்வமானதாகக் காணப்பட்டன. ஈழத் தமிழர்களை கொன்றழித்து யுத்த வெற்றி கொண்டுள்ளதாக கொண்டாhடி மகிழும் ராஜபக்ஷ அரசியலுக்கு எதிரான அழுத்தமாகவே அவை முற்று முழுதாக அமைந்திருந்ததை காணக் கூடியாத இருந்தது.

jaswanth-singமார்ச் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக உலகலாவிய ரீதியில் நினைவு கூரப்படும் நிலையில் அவற்றை உள்ளார்த்தமாக நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில் நாம் எத்தனை பேர் இருக்கிறோம் என்ற பதில் தெரியாத கேள்வியுடன் ஆரம்பித்த அவர் அவ்வாறான நிலைக்குள் கட்டுண்டு கிடக்கும் சகோதரர்களுக்காக தாம் மன வேதனையடைவதாக கூறி ஈழத்தமிழர்களின் விடயத்துள் தன் கவனத்தை உள் நுழைத்தார்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் என கவலை வெளியிட்ட அவர் அவற்றை சனல் 4 வின் ஆவணப்படம் ஆதார பூர்வமாக எடுத்துரைத்து நிற்பதாகவும் கூறினார். குறித்த ஆவணப்படத்தை சில வினாடிகள் கூட தன்னால் பார்க்க முடியவில்லை என உணர்வுபூர்வமாக வேதனைப்பட்ட ஜஸ்வந் சிங்கா இது மனித உரிமை மீறலின் உச்சசக் கட்டம். இதனை மிருகங்களால் கூட மேற்கொள்ள முடியாது என தெரிவித்ததுடன். நிர்க்கதியாக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவ தவறியவர்கள் மீது தமது ஆத்திரத்தை வெளியிட்டதுடன். இது தொடர்பில் இந்தியாவையும் இந்தியர்களையும் கூட சாடி நின்றார். ஈழத் தமிழர்களுக்காக காலம் தாழ்த்தி குரல் கொடுக்கும் ஜஸ்வந் சிங்கா ஏன் தமிழர்கள் இன்னலுறும் காலங்களில் அமைதி கார்த்தார் என கேள்வி கேட்ககூடாது என்பதற்காக தாம் 2009 கள் முதல் வைகோ உடன் இணைந்து எங்கெல்லாம் செயற்பட்டார் என பட்டியலிட்டுக் காட்டினார். 2009 களில் லோக் சபையில் ஈழத்தமிழர் விடயத்தை முன்வைத்து வலியுறுத்தியதுடன் ஈழத்தமிழர்களுக்காக இந்தியா இலங்கை மீது அழுத்தங்களை கொடுப்பதுடன் பொருளாதார தடைகளையும் விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததாகவும் எவ்வாறாயினும் இந்தியா இலங்கையை பகைத்தால் சீனா இலங்கையில் ஆதிக்கத்தை கூட்டிக் கொள்ளும் என்பதனை மேற்கோள் காட்டிய இந்தியா இந்த விடயத்தில் பின்வாங்கி நின்றதாக சாடினார்;. இந்தியா தமது வெளிநாhட்டு கொள்கையினை ஆக்கபூர்வமான விடயங்களிலும் அது சார்ந்த வழியிலுமே முன்னகர்த்த வேண்டுமே தவிர கோழைத்தனமான செயற்பாடுகளுக்காக வெளிநாட்டுக் கொளகையினை பயன்படுத்தலாகாது அது விதியுமல்ல என எடுத்துரைத்தார்.

நிற்க. ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் தமது பிரேரணையை சர்ப்பித்து ஒரு சில மணித்தியாலங்களில் மியன்பாரில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில்; பிரத்தியே சந்திப்பு இடம்பெற்றதை சுட்டிக்காட்டிய அவர் இந்திய பிரதமர் இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேசியதாக வெளியுலகிற்கு செய்தியாக காட்டினர் இதில் இந்திய பிரமரது கேள்விகளோ அல்லது ராஜபக்ஷவின் பதில்களோ எந்த விதத்திலும் ஆக்கபூர்வமானதாக இடம்பெற்றிருக்கவில்லை மாறாக ஓர் ஏமாற்றுக் கண்துடைப்பாகவே காணப்பட்டது என கண்டனம் வெளியிட்டதுடன்.

இந்தியப் பிரதமர் குடியரசை எடுத்துச் செல்ல வலுவற்றவர் என கூறினார். இதனால்தான் இந்திய பிரதமரை சிறு அயல் நாடுகள் கூட ஏழனமாகவே கொள்கின்றனர் என கேலி செய்ததுடன் இலங்கைத் தமிழர் படுகொலையின் பின்னணியில் மஹிந்தவிற்கா அல்லது இந்தியப் பிரதமருக்கா அதிகம் பங்கு இருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது என கேள்வியையும் முன் வைத்தார். இதனை தாம் வெளிப்படையாக இந்திய அரசிடம் எடுத்துரைத்திருந்ததை ஆதாரங்களுடன் வெளிக்காட்டினார். ஆயுதம் கையிலெடுத்து அப்பாவித் தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் அழித்தொழித்த மஹிந்த அரசு மாத்திரம் மனித உரிமை மீறல்களிலும் யுத்தக் குற்றச் செயல்களிலும் ஏன் இனவழிப்புக்களையும் மேற்கொண்டதாக தெரிவிப்பது தவறு அவருடன் சேர்த்து அந்த ஆயதங்களை வழங்கியவர்களது கரங்களுமே இரத்தக் கறை படிந்தவை அவர்களுக்கும் இதில் பங்குள்ளது என இந்திய அரசை வன்மையாக கண்டித்தார்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை அழித்தொழித்தது இந்திய கடற்படையினரே தவிர வேறுயாருமல்ல அது மாத்திரமல்லாமல் விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முடியாமல் கடல் வழியினை மறைத்து வைத்திருந்ததும் இந்திய கடற்படையினரே என கட்டம் காட்டிய ஜஸ்வந் சிங்கா இதனைச் செய்யுமாறு இந்திய அரசிடம் ராஜபக்ஷகேட்டுக் கொண்டாரா என கேள்வி எழுப்பியதுடன் இவை அனைத்துக்கும் சோனியா தலைமையிலான ஆள10ம் அரசும் பொறுப்பு நிற்க வேண்டும் என எச்சரித்தார். முந்தைய நாட்களில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியன் போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என கூறிய அவர் சோனியா அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்டி தாம் ஆட்சிப்பீடம் ஏறுவது தொலைவில் இல்லை என உறுதிபட தெரிவித்தார்.