‘சுதந்திர தினம்’ எனும் போது,சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின்நினைவு வரும்.

இலங்கையில் அப்படியாக யாரும்பெரியளவில் நினைவுகூரப்படுவதில்லை.

 

காலனிய ஆதிக்கத்திலிருந்துவிடுபடும்போது பேச்சுவார்த்தையில்ஈடுபட்டவர்களே, பின்னர் பிரதமராகவும்சுதந்திரத்தைப் பெற்றுத்தந்ததியாகியாகவும் போற்றப்படுகின்றனர்.

அந்த தியாகச் செம்மலே, கல்லோயாத்திட்டம் மூலம் கிழக்கில் சிங்களக்குடியேற்றத்தை முன்னெடுத்தார் என்பதைஇந்த சுதந்திர தினங்கள்நினைவுபடுத்துகின்றன.

 

ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வுச்சூழலைப் பொறுத்தவரை, இலங்கையின்சுதந்திரதினம் கொண்டாடப்பட்டதாகவரலாறு இல்லை.

திருமலை நடராசன், சார்ள்ஸ் அன்டனிபோன்ற மண்ணின் மறவர்கள், இலங்கைத்தேசியக் கொடியை அடியோடு நிராகரித்தநிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.

 

இருப்பினும் ஈழத்தமிழர்களைபொறுத்தமட்டில், தாய் மண்ணின்மீட்பிற்காய் களமாடி வீரமரணமடைந்தபல்லாயிரக்கான மாவீரர்களின் தியாகம்நிலையானது.

அவர்கள் எமதினத்தின் சுதந்திரத்திற்காகவிதையாகிப் போனவர்கள்.

 

அப்படி இருக்கையில், எவ்வாறு அடக்கும்பேரினவாத அதிகாரவர்க்கத்தின் சுதந்திரதினத்தை, ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியஇனம் கொண்டாட முடியும்?.

 

நல்லிணக்க அரசியல் பேசும் சரணாகதிஅரசியல்வாதிகளுக்கு, சிங்களத்தின்சுதந்திர தின நிகழ்வுகள் தேவைப்படலாம்.

மக்களின் வாக்குகளைப் பெற்று,சலுகைக்காக அரசியல் செய்யும்பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

 

முன்பு சோனியாவின் கண்களில் கருணைஒளியினைக் கண்டது போல, ரணிலின்ஒற்றையாட்சி அரசியல் சாசன வரைபில் சமஸ்டியைக் கண்ட கொடுமையான விடயங்களும் இப்போதுசொல்லப்படுகிறது.

 

2009 ஆண்டிற்குப் பின்னரான தமிழ் தேசியஅரசியலானது, நாடாளுமன்றம் மற்றும்மாகாண சபை வாக்குவங்கிபோட்டியரசியலிற்குள் மூழ்கிவிட்டது.

 

‘ஏக்கிய ராஜ்ய’ விவாதங்களுக்குஇடைக்கால ஓய்வு கிடைத்த நிலையில்,அபிவிருத்தி அரசியலில் களமிறங்கியுள்ளதுகூட்டமைப்பு.

அதுவும் அடுத்த தேர்தல் வரையே  இதுநீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரணிலின் அதிகாரத்தின் கீழ்வரும் இந்தவடக்கு கிழக்கு அபிவிருத்தி சபாக்களுக்கு,  ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்நடந்துள்ளது.

 

‘சோறா..சுதந்திரமா?’, ‘ அபிவிருத்தியா…தீர்வா?’ என்று வீர முழக்கமிட்டவர்கள்,உள்ளூராட்சிசபை வீழ்ச்சியோடுஅபிவிருத்திக்கு தாவி விட்டனர். அதன்ஆயுளும் குறுகிய காலந்தான்.

 

இருப்பினும் இந்தத் தாவலுக்கும் ஒரு விலைஉண்டு.

சிங்களத்தின் சுதந்திர கொண்டாட்டத்தில்சிங்கக்கொடியை உயர்த்தும் சோகமும்நிகழலாம்.

அத்தோடு ஐநா மனித உரிமைப்பேரவையில் காலநீடிப்பிற்கு கையசைக்கும்கொடுமையாகவும் இருக்கலாம்.

 

ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றியதற்கும்,வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டத்தைப்பொறுப்பேற்றதற்கும் தொடர்பு உண்டு.

அதுதான் அங்கு நடந்த பேரம்பேசும் நிகழ்வு.

கூட்டமைப்பின் அரசியல் இருப்பிற்குஅவசியமான தேவையாகவும் இதுஇருக்கிறது.

 

கூட்டமைப்பிற்கு எதிராக உருப்பெறும்பலமான எதிர்ப்பரசியல் குறித்த கவலை,அதன் செயற்பாட்டார்கள்  மத்தியில்ஏற்படுவதனையும் அவதானிக்க முடிகிறது.

 

இப்போது தொடரும் நல்லிணக்க-சரணாகதி அரசியல் போக்குநீடிக்குமாயின், மாற்று அரசியலின் தேவைதவிர்க்கமுடியாதது போலாகிவிடும்.

 

அவ்வாறான மாற்று அரசியல் தளமானதுபிராந்திய வல்லான்களின் நலனுக்குசாதகமாக அமையாத அதேவேளைஅவர்களுக்கு சிக்கலையும் கொடுக்கும்.

 

சிங்களத்தின் ‘சமஷ்டி’ கொடாக்கண்டன்நிலையையும் , ‘ஒற்றையாட்சி’விடாக்கண்டன் நிலையையும் கவனத்தில்கொள்ளும் இலங்கையில் தலையிடும்வல்லரசுகள், தமிழ்த் தேசிய இனத்தின்அரசியல் அபிலாசையோடு இணங்கிப்போவது கடினமாக இருக்கும்.

 

இந்நிலையில், எமக்குச் சாதகமானசர்வதேச சூழல் உருவாகிறதென்கிற எதிர்வுகூறல் எவ்வளவு அபத்தமானதுஎன்பதனை, மைத்திரியார்சனாதிபதியாகிய ஆட்சிமாற்றகாலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

 

ஆகவே அடிப்படைக்கோட்பாட்டில்பற்றுறுதி கொண்ட, பலமான  மாற்றுஅரசியல் தளத்தின் அவசியம், மக்களின்பொதுப்புத்தியில் உணரப்பட வேண்டும்.

வெறுமனே தேர்தல் அரசியல் பாதை மட்டும்அதனை உருவாக்குமென எதிர்பார்க்கமுடியாது. மக்கள் திரள் அரசியல்இயக்கத்தின் இருப்பும் இங்குஅவசியமாகிறது.

 

ஒடுக்குமுறையாளர்களின் சுதந்திரதினத்தில், அடக்கப்படும் தமிழ்த் தேசியஇனம் கவனத்தில் கொள்ள வேண்டியவிவகாரம் இதுவாக இருக்கும்.

 

நன்றி: இலக்கு மின்னிதழ் (03-02-2019)