deepaஇதற்கு முன்னர் மனித இனம் இத்தகைய துயரங்களை சந்திருக்கிறதா? உலகில் மனித இனங்கள் இவ்வாறு எல்லாம் அநீதிக்கு உட்படுத்தபடப்டிருக்கினறதா? ஈழத்தில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மனித குலத்திற்கு விரோதமான இந்த அநீதிகள் தண்டிக்கபட வேண்டியவை ஒரு ஈழத்தவளாக ஒரு ஈழப் பெண்ணாக இருந்தமையினால் இசைப்பிரியாக்கு இந்த அநீதி நேர்ந்திருக்கிறது.

இசைப்பிரியாவின் முகமும் புன்னகையும் குரலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மிகவும் மென்மையானவர் அவர். குழந்தை போன்ற உள்ளம் கொண்டவர். இசைப்பிரியா வன்னியில் உள்ள பலருக்கும் அறிமுகமான முகம். ஒளிவீச்சிலிருந்து தேசியத் தொலைக்காட்சிவரை அவர் ஊடகவியலாளராக மக்களுடன் பயணித்தவர்.

இசைப்பிரியா தொடர்பான படுகொலையை மறுக்கும் இலங்கை இராணுவம் அவர் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்று சொல்லுகிறது. புலிகள் இயகத்தில் இருந்த பெண்ணாக இருந்தால் இப்படித்தான் சித்திரவதை கொலை செய்வோம் என்றே இராணுவம் வெளிப்படையாக சொல்லுகிறது.

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து உலக சமூகம் என்ன செய்யும்?

சிங்கள மக்களே! உங்கள் வீரம்மிகு படைகள் இப்படித்தான் எங்களை அழித்தன. உங்கள் வீரம்மிகு படைகள் இப்படித்தான் எங்கள் பெண்களை வேட்டையாடின.

ஒன்று மட்டும் உறுதியானது!

சிங்களப் படைகள் இழைத்த குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியது ஏனெனில் இனியும் உலகில் இப்படி ஒரு இனம் அழிக்கப்படக்கூடாது. இனியும் இப்படி ஒரு பெண்ணுக்கு அநீதி நேரக்கூடாது. எமது இனத்திற்கு நேர்ந்த அநீதி எமது சகோதரிக்கு நேர்ந்த அநீதி உலகத்தில் எங்கேனும் இனியும் நிகழக்கூடாது.

தீபச்செல்வன்