தாய­கத்தில் கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடிக் ­கண்­ட­றியும் குடும்­பங்­களின் சங்­கத்­தினர், நான்கு முக்­கிய கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி, சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ள­தாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் ஆகி­யோ­ருக்கு கையொப்­ப­மிட்டு அறி­வு­றுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளனர்.

 

01. எமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கி­றார்­களா? இல்­லையா?

 

02. உயி­ருடன் இருந்தால், அவர்கள் எந்த இர­க­சிய சித்­தி­ர­வதை முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்?

 

03. உயி­ருடன் இல்­லா­விட்டால், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? யாரால்? எப்­படி? கொலை­ செய்­யப்­பட்டு, எங்கே புதைக்­கப்­பட்­டுள்­ளார்கள்? என்­ப­வற்றை நாட்டு மக்­க­ளுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.

 

04. கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள எமது உற­வுகள் உயி­ரோடு இருப்பின், அவர்கள் தத்­த­மது குடும்­பத்­தி­ன­ரோடு இணைந்து வாழ்­வ­தற்கு உட­ன­டி­யாக வழி விடு­வ­தோடு, சகல அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய்ய வேண்டும்.

 

குறித்த எமது கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களால் நிறை வேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள் ளோம். நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி,பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப் படுத்துகின்றோம்.

ஆதித்தன் ஆதி