இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் ஐரோப்பா வாழ் தமிழர்களின் பேரெழுச்சி

0
631

20இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் நேற்று (16.09.2013) இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நிழற்படத்தினை உணர்வாளர்கள் முன்;தாங்கிச் செல்ல ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியினை இழுத்துக்கொண்டு மக்கள் ஊர்வலமாக நகர்ந்து முருகதாசன் திடலை வந்தடைந்தனர்.
26
பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் ஈகைப்பேரொளிகளுக்கான ஈகைச்சுடர்கள் ஈகைப்பேரொளியின் உரை உள்ளடங்கிய பாடல் ஒலிக்க ஏற்றி வைக்கப்பட்டதோடு அகவணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டன.

தொடர்ந்து சமகால சூழ்நிலைகளுக்கேற்ற உரைகளும் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.
அத்துடன் எதிர்வரும் 30.09.2013 திங்கட்கிழமை அன்று ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இனவழிப்பிற்கு நீதிகேட்டு மீண்டும் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென்று உறுதியெடுக்கப்பட்டதோடு இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டது.
6
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் நிறைவுபெற்றன.

தொடர்ந்து பெல்ஜியத்தை நோக்கி துவிச்சக்கரவண்டி பயண கவனயீர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பயணமானது பெல்ஜியம் புறூசல்ஸ் நகரில் அமைந்திருக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற சதுக்கத்தில் எதிர்வரும் 30.09.2013இல் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வில் நிறைவடையும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

-சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு