IDP-Kiddsஅவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்விநிதியத்தின் 24 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்

இலங்கையில் நீடித்தபோரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியைதொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்படபல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது.

அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கைமாணவர் கல்விநிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டுமுதல் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போரினால் தாய், தந்தைமற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக உதவிவருகிறது.

முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக புகுமுகவகுப்பு ( க.பொ.த. உயர் தரம்) வரையில் கல்விபயிலும் மாணவர்கள் பலர் இந்த உதவித்திட்டத்தினால் நல்ல பலனையும் பயனையும் அடைந்துள்ளனர்.

கடந்தஆண்டுகளில் இலங்கைமாணவர் கல்வி நிதியத்தின் உதவியினைப் பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்துள்ளனர். மேலும் பலமாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து,பட்டமும் பெற்றுதொழில் வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.

போரில் தமதுகால் இழந்த சில மாணவர்களும் இந்நிதியத்தின் ஆதரவுடன் தமது கல்வியை தொடருகின்றனர். ஒரு மாணவருக்கு உதவவிரும்பும் அன்பர் மாதாந்தம் கூ 21 அவுஸ்திரேலியன் வெள்ளிகளை வழங்குவதன் மூலம் ஒரு மாணவர்,தனது கல்வியை நிறைவுசெய்யும் வரையில் உதவமுடியும்.

உதவிபெறும் மாணவரின் பூரண விபரங்கள் உதவும் அன்பருக்கு தரப்படுவதுடன்,மாணவரின் கல்வி முன்னேற்றச் சான்றிதழ் மற்றும் உதவி பெற்றதை அத்தாட்சிப்படுத்தும் கடிதங்கள் முதலானவற்றையும் நிதியம் அன்பர்களுக்கு அனுப்பிவைக்கும். மாணவருக்கு உதவும் அன்பர்கள் விடுமுறைகாலங்களில் இலங்கைசெல்லும் சந்தர்ப்பங்களில், தாம் உதவும் குறிப்பிட்ட மாணவர்களைநேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கை மாணவர் கல்விநிதியம், 2004 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி கடற்கோளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கும்,2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் வன்னியில் நடந்த போரினால் பாதிப்புற்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மாணவர்களுக்கும் உதவி வழங்கியிருப்பதுடன், முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின்

கல்வி நலன்களை கவனித்து, அவர்களை விடுவித்து க.பொ.தசாதாரணதரம் மற்றும் உயர்தர வகுப்பு பரீட்சைகளில் அவர்கள் தோற்றுவதற்கும் பெற்றோர்களிடம் இணைந்து கொள்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டமும் தகவல் அமர்வும் மெல்பனில், வேர்மன்ட் சவுத் சமூக இல்லத்தில் எதிர்வரும் 19-10-2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.

Vermont South Community House – Karobran Drive,
Vermont South, Victoria 3133, Australi


மாணவர்களுக்கு உதவவிரும்பும் அன்பர்கள் கல்வி நிதியத்தின் மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

E.Mail: kalvi.nithiyam@yahoo.com Web: http://www.csefund.org