கடந்த 8ம் திகதி தேர்தல் நடைபெற்றவேளை, மகிந்தர் மற்றும் அவரது 3 மகன்மாரும் சேர்ந்து சென்று வாக்குச் சாவடியில் வாக்குகளைப் போட்டுள்ளார்கள். பின்னர் மகிந்தரின் புதல்வர்கள் மூவரும் இரவு நேரக் கழியாட்ட விடுதிக்கு சென்றுவிட்டார்கள்.

தனது அப்பா தான் நிச்சயம் ஜெயிப்பார் என்றும், அதற்கான பார்டி தான் இது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இதேவேளை கழியாட்ட விடுதியில் இருந்தவாறே நமால் ராஜபக்ஷ தனது ரிவீட்டர் சமூக வலையத்தளத்தில் மைத்திரி ஒரு “டம்மி பீஸ்” என்று நக்கல் அடித்துள்ளார்.

mahinda
இதனை அவரது நண்பர்கள் பரிமாறி, நக்கலடித்தும் உள்ளார்கள். இதேவேளை மாலை 7 மணிக்கு உறங்கச் சென்ற, மகிந்த இரவு 10.00 மணிக்கு எழுந்து வந்து அலரிமாளிகையின் முற்றத்தில் அமர்ந்திருந்தாராம்.

அவ்வப்போது சில அதிகாரிகள் வந்து அவரைப் பார்த்துச் சென்றுள்ளார்கள். இதேவேளை வாக்குச் சீட்டுகள் எண்ணப்படும் எல்லாநிலையங்களிலும், வேலைசெய்யும் ஆட்களில் ஒருவர் மகிந்த போட்ட ஆளாக இருந்துள்ளார். இது பரவலாக பல இடங்களில் நடந்துள்ளது. இன் நபர்கள் எந்த தில்லு முல்லும் செய்யமாட்டார்கள். (செய்யவும் முடியாது) ஆனால் அவர்கள் வாக்குகளை எண்ணி , அந்த தொகுதியில் யார் வென்றது என்று தெரிந்ததும், அதனை தேர்தல் ஆணையாளருக்கு சொல்ல முன்னரே SMS மூலம் மகிந்தரின் பிரத்தியேக அதிகாரிக்கு அனுப்பிவிடுவார்களாம்.

இலங்கை நேரப்படி 11.00 மணிக்கே தபால்மூல வாக்களிப்பில் மைத்திரி முன்னிலை வகிப்பது மகிந்தருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் நள்ளிரவு 12.00 மணிக்கு வட கிழக்கு முடிவுகளை இவர், இதுபோன்ற அள்ளக்கைகளின் தகவல் ஊடாக அறிந்துகொண்டாராம்.

இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு தான் மகிந்தருக்கு முதல்-முதலாக நடுக்கம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. மிகவும் பரபரப்பாகி, அங்கும் இங்குமாக குட்டிபோட்ட பூனைபோல அலைந்து திரிந்துள்ளார். ஒரு சமயம் புதல்வர்கள் எங்கே என்று கேட்டவேளை தான் அதிகாரிகள் அவர்கள் இருக்கும் இடத்தைச் சொல்லி, அவர்களை அங்கே அழைக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

வட கிழக்கில் விழுந்த வாக்குகளை பார்த்து ஆடிப்போன அவர், பசிலுக்கு தொலைபேசி அழைப்பை போட்டு , என்னமோ வட கிழக்கில் உள்ள தமிழர்கள் இம்முறை தேர்தலை பகிஷ்கரிப்பார்கள் என்று சொன்னாய். ஆனால் அப்படி நடக்கவில்லையே என்று திட்டியுள்ளார். எனக்கு அமைப்பாளர்கள் மற்றும் தேர்தல் வேலைகளை கவனிப்பவர்களே இதனைக் கூறினார்கள் என்று பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

எல்லாம் நாசமாகப் போய்விட்டது என்று கூறிய மகிந்தர். பின்னர் தான் உடனடியாக கோட்டபாயவை தொடர்புகொண்டு, தேர்தல் முடிவுகள் வெளியாவதை தடுக்க முயன்றுள்ளார். பொலிசார், ராணுவத்தினர் என்று உதவிகளை கோரிய மகிந்த இறுதியாக கடல் படை தளபதியிடமும் உதவி கோரியுள்ளார். ஆனால் இவர்கள் எல்லோருமே சொல்லிவைத்தால் போல, மகிந்தரின் கோரிக்கையை ஏற்க்கவில்லை.

இதேவேளை தேர்தல் முடிவுகளை வெளியிடும் அலுவலகம் அருகே, கலவரத்தை தூண்டி அந்த இடத்திற்கு அதிரடிப்படையை அனுப்பி முடிவுகள் வெளியாவதை தடுப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கு பொலிசார் இணங்கவில்லை.தேர்தல் முடிவுகள் தமக்கு பாதகமாக மாறத்தொடங்கியதை, கழியாட்ட விடுதியில் வைத்து தான் நமால் அறிந்துகொண்டுள்ளார்.

இவர்கள் அலரிமாளிகைக்கு சென்று அப்பாவை பார்க்க முன்னரே, அங்கே நிலமை தலை கீழாக மாறிவிட்டது. மகிந்தரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ கடும் வாக்குவாதப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் என்ன நடக்கிறது என்று கூட அறியமுடியாமல் மூன்று புதல்வர்களும் இருந்துள்ளார்கள். இறுதியாக ஷிராந்தி தொடர்புகொண்டு மூன்றுபேரையும் தான் தங்கியுள்ள வீட்டிற்கு அழைத்துள்ளார்.

பின்னரே மகிந்த ராஜபக்ஷ ரணிலைச் சந்தித்துள்ளார். இவை அனைத்தும் அலரி மாளிகையில் வேலைசெய்யும் நபர்களால், தற்போது அலரி மாளிகையில் ஆட்சியில் உள்ள அதிகாரிகளுக்கு கூறப்பட்ட செய்தி ஆகும்