சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில மகிந்த ராஜபக்சா கண்ட தோல்வியை தொடர்ந்து அவரின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சா இராணுவ விமானம் மூலம் தனது மனைவி அனோமா ராஜபக்சாவுடன் மாலைதீவுக்கு அவசரமாக தப்பிச் சென்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் ஈழம்ஈநியூஸ் இற்கு தெரிவித்துள்ளன.

gota
மகிந்தாவின் மூன்று புதல்வர்களும் சீனாவுக்கு தப்பியோடியுள்ள நிலையில் கோத்தபாயா இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளார். மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கு நுளைவு அனுமதி தேவையில்லை என்பதால் சிறீலங்கா அரச தரப்பின் பல முக்கிய பிரமுகர்கள் இந்த நாடுகளுக்கு தப்பியோடி தப்பியோடி வருகின்றனர்.

இதனிடையே இன்றுகாலை நாடாளுமன்றத்தை கலைக்கவும், அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தவும் மகிந்த முனைந்தபோதும் அது சிறீலங்காவின் எதிரணியினராலும், நீதித்துறையினாலும் தடுக்கபப்ட்டுள்ளது. அதன் பின்னரே தேர்தல் ஆணையாளர் தனது இறுதியான முடிவை வெளியிட்டிருந்தார்.

தேர்தல் ஆணையாளரின் இந்த தாமதமானது பலர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கும் முயற்சியின் உள்நோக்கமாகும். சிறீலங்கா அரச தலைவர் மாளிகையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிறீலங்காவின் முன்னாள அரச தலைவர் மகிந்தா அவரின் நண்பரும், தொழிலதிபருமான ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

அவரை பாதுகாப்பாக ரணில் விக்கிரமசிங்கா அவர்களே அழைத்துச் சென்றிருந்தார். எனினும் மகிந்தா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா அரசின் முக்கிய அமைச்சரும், கடும்போக்காளருமான விமல் வீரவன்சா சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரின் மனைவி அவருக்கு முன்னரே சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழுக்களின் தலைவர்களான கருணா, பிள்ளையான், கே.பி மற்றும் டக்ளஸ் ஆகியோரின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.