சிறீலங்காவின் அரச தலைவரும் பிரதம போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சாவின் இந்திய வரவை எதிர்த்திருக்கக்கூடாது என இந்திய அமைதிப்பமையின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஹரிகரன் விகடன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ள கருத்து குறித்து மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன் காந்தி அவர்கள் முகநூலில் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு தருக்கின்றோம்.

ராஜபக்சேவினை கொஞ்சிக் குலாவியே தமிழர்களை காக்கவேண்டுமென்று பேசுகின்ற அதிமேதாவிகள்.

mahi-bjpஇந்த கும்பல், ஹரிஹரன், சூரிய நாராயணன், சத்யமூர்த்தி, ராமன், வாசன், ராகவன், இன்னும் பலர் இலங்கைக்கு ஆதரவான கருத்தியல் அடியாள்களாக செயல்படுபவர்களை அடையாளம் காணவேண்டுமென கிட்டதட்ட 4 வ்ருடங்களாக கோரிவருகிறோம்.

இவர்களை எதிர்த்து பல கட்டங்களில் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தாலும், அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இவர்களை தனிமைப்படுத்துவதை செய்ய முன்வரவேண்டும். மூன்று வாரங்களுக்கு முன்பாக அகதிகளாக வருபவர்கள் ‘விடுதலைப் புலிகளால’ இருக்கலாம் ஆகவே அவர்களை எச்சரிக்கையுடன் கைது செய்வது நல்லது என்பதாக கருத்துக்களை பரப்பினார். எதிர்ப்பினை பதிவு செய்தோம்.

இவர்களுக்கு ஈழப்படுகொலையில் பலவழிகளில் பங்கு இருக்கிறது. மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும், பெசண்ட் நகரிலும் அமர்ந்து கொண்டு இவர்கள் இலங்கை ராணுவம் வலிமையடைவதற்கான பல பணிகளை செய்தவர்கள்; தமிழர்கள் கொலை செய்யப்படுவதை நியாயப்படுத்தியவர்கள், இன்றும் நியாயப்படுத்துபவர்கள்…

ஈழத்தில் அட்டூழியம் செய்த அமைதிப்படைக்கு உளவுப்பிரிவு தலைவரகாக இருந்தவர் இந்த ஹரிஹரன். பல்வேறு கொடூரமான கொலைகளை நியாயப்படுத்தும் அதிகாரி கும்பலில் முதன்மையானவர்.

இவர்களை தி இந்து, காலச்சுவடு, போன்ற கும்பல்கள் அதிகம் முக்கியத்துவம் தந்து கருத்துக்களை எழுதுவார்கள். இலங்கை அரசினைவிட கொடிய மனம் படைத்தவர்கள் இந்த கும்பல்.

முகநூல் தோழர்கள் ஒன்றிணைந்து இந்தக் கும்பலை எதிர்க்க கைகோர்க்க வேண்டும்… நீங்கள் எந்த அமைப்பு-கட்சி என்பதல்ல முக்கியம்; நாம் கைகோர்க்கவேண்டுமென்பதே முக்கியம்…. இந்தக் கும்பல் பொய் பரப்பலை செய்யும் பொழுது உங்கள் எதிர்ப்புகளை வலிமையாக பதிவு செய்யுங்கள்.. இது மிக மிக முக்கியம்… ஒன்றிணையுங்கள், முன்னெடுங்கள்.