இலங்கைத் தமிழர்களுக்காக பாராளுமன்றில் குரல் கொடுக்காமல் முச்சந்தியில் பேசுவது ஏமாற்று வேலை! நெடுமாறன்

0
616

nedumaஇலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வாக பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுப்­ப­தற்­குப் ­ப­தி­லாக, காங்­கிரஸ் அமைச்­சர்கள் முச்­சந்­தி­களில் நின்று பேசு­வது ஏமாற்று வேலை என்று உலகத் தமிழர் பேர­மைப்பு அறக்­கட்­டளை தலை­வ­ரான பழ.நெடு­மாறன் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் அவர் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையில் மீத­முள்ள தமி­ழர்­க­ளையும் ஒழிப்­ப­தற்­காக அந்­நாட்டு அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­டு­வரும் நிலையில், பிரிட்டிஷ் பிர­தமர் தைரி­ய­மாகச் சென்று தமி­ழர்­களைச் சந்­தித்துப் பேசி­ய­துடன் அது­கு­றித்து பொது­ந­ல­வாய மாநாட்­டிலும் கண்­டனம் தெரி­வித்தார்.

இத்­த­னையும் நடை­பெற்ற பிறகும் இலங்­கைக்கு அருகில் உள்ள இந்­திய அரசோ, தொடர்ந்து மெளனம் சாதித்து வரு­கி­றது. இது இலங்கைத் தமி­ழர்கள் விவ­கா­ரத்தில் தங்­களின் நிலையில் எந்­த­வித மாற்­றமும் இல்லை என்று மத்­திய அரசு கூறு­வ­தைப்­போன்று அமைந்­துள்­ளது.

காங்­கிரஸ் கட்­சியின் அமைச்­சர்கள், தமிழர் விவ­கா­ரத்தை பாரா­ளு­மன்றம், அமைச்­ச­ர­வை­களில் பேசு­வதை விட்­டு­விட்டு முச்­சந்­தியில் நின்று பேசு­வது தமி­ழர்­களை ஏமாற்றும் வேலைதான் என்றார்.