இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகள் பாரிய இராணுவமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் கணேஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

85 வீதமான சிங்கள இராணுவத்தினர் தமிழ் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். 96 வீதமான தமிழ் மக்கள் 5 கிலோ மீற்றருக்கு ஒரு இராணுவ முகாம் அல்லது சோதனை சாவடிகள் என்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தற்போது நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு,

ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது: பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் 27 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் கனேஸ் லங்காசிறி வானொலியின் பிரத்தியேக பேட்டியில் பங்கேற்றார்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பில் பன்னாட்டு விசாரணை அவசியம் என தாக்கல் செய்த அறிக்கை ஒரு முன்னேற்றகரமான விடயமாக இருக்கின்றது என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கணேஸ் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=YhcOAckc4Oc