‘இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ நலன்கள்’ என்கிற இந்த கட்டுரையானது, இலங்கையில் வசித்தவரும் பிரபல தமிழ் பத்திரிக்கையாளருமான, மறைந்த ‘தராக்கி’ சிவராம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும்.

ஐக்கிய அமெரிக்க அரசு உலக நாடுகள் மத்தியில் ஒரு ராணுவ பொருளாதார வல்லரசாக திகழ்கிறது என்பதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அது உலக புவியியல் பரப்பில் அதனுடைய நலன்கள் வேறு வேறு மாதிரிகளில் வடிவம் கொள்கிறது.

இந்து மகாசமுத்திரம் என்ற பெரும்நீர்பரப்பை ஒட்டி நாம் வாழ்கிறோம் ,இதே நீர்பரப்பை ஒட்டி வாழ்கிற ஈழ தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை சந்தித்து கொண்டிருக்கிறார்கள், இப்பேரழிவில் அமெரிக்காவின் பங்கு நாம் அறிந்ததே. எனவே அமெரிக்காவின் இந்து மகா சமுத்திரத்தின் புவியரசியலின் மையம் அதனது ராணுவ மூலோபாய(strategic) நலன்களின் பல்வேறு பரிணாமம் மற்றும் ஆழம் குறித்து தமிழ் சமூகம் அறிந்து கொள்ள வேண்டியது அரசியல் தற்கார்ப்புக்கு இன்றியமையாததாகும். இந்த கட்டுரை முள்ளிவாய்க்காலுக்கு முன்னான ராணுவ மூலோபாய (strategic) நிலைபாடுகளையே ஆய்வு செய்கிறது.

usa-lanka
அமெரிக்க அரசின் தெற்காசிய மற்றும் ஆசியா பிராந்தியத்தில் அதனுடைய ராணுவ நோக்கங்கள் பிண்ணிப்பினைந்ததாகும்.

அதனுடைய மையம் இந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் அரசியல் பொருளாதார ராணுவ மேலாதிக்கத்தினைத் தடுப்பது. இதற்கு இரண்டு முக்கியாமான காரணம் உள்ளது. அவை,

1.உலகத்தின் ஒரு முக்கியமான பகுதியிலிருந்து அமெரிக்காவின் ராணுவ பொருளாதார அரசியல் நுழைவின் மறுப்பை தடுப்பது.

2.பல்வேறு நாடுகளின் அரசியல் கூட்டணியோடு சோவித் ரஷ்யா போன்று தோன்றி அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால் விடுவதை தடுப்பது.

அமெரிக்காவிற்கு தற்போது ஆசியா கண்டத்தில் எந்த ஒரு தேசமும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால் விடும் நிலையில் இல்லை. ஆனால் சீனா,இந்தியா,ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் தாங்களாகவே ஒரு பிராந்திய ஆதிக்க சக்தியாக உருவாகவும், அல்லது ஒரு கூட்டணியோடு ருச்சியாவையும் இணைத்து கொண்டு ஒரு ஆதிக்க சக்தியாக உருவாக சாத்தியப்பாடு உள்ளதாக அமெரிக்கா காண்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு தடை நீக்கப்பட்ட அமெரிக்க படைத்துறை ஆய்வு ஒன்று பிராந்திய ஆதிக்கச்சக்திகளை எதிர்கொள்வதற்கு நான்கு முறைகளை வெளியிடுகிறது.

1.குறிப்பிட்ட நாட்டை அதன் பாதுகாப்பு நலன்கள் அமெரிக்காவின் அந்த பிராந்திய ராணுவ செயல்பாடுகளின் மூலமே பூர்த்தியடையும் என்று நம்ப வைப்பது.

2.பல நாடுகளுடன் இராணுவ கூட்டணியோடு அமெரிக்க விமான படைக்கு தளத்தை அமைத்துக் கொண்டு அந்த பிராந்தியத்தின் மாறி வரும் அரசியல் பொருளாதார சூழலில் செல்வாக்கு செலுத்துவது,பின்பு எதிர்கால ‘’நடவடிக்கைகளுக்கு’’ தகவமைத்துகொள்வது

3.ஒரு குறிப்பிட்ட நாடு அந்த பிராந்திய வல்லரசுகளோடு சேர்ந்து கொண்டு மிகவும் நெருக்கடியான அமெரிக்காவின் நலன்களை ஆசியாவில் பாதிக்காமல் தடுப்பது.

4.எந்த நாடு அமெரிக்க மேலாதிக்கத்தினை எற்கின்றதோ அதனுடன் அரசியல் பொருளாதார கூட்டணியை உருவாக்கி பிராந்திய வல்லாதிக்கசக்திகளுடன் சேரும் நாடுகள் மீது அமெரிக்க துணையுடன் ஐநா மூலம் நடவடிக்கை எடுப்பது.

இந்த தருவாயில் அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்தில் அதனுடைய தலையாய கவலைகள்:

1. அணு மற்றும் வெகு தொலைவிற்கு செல்லும் ஏவுகணை தயாரிப்பை இந்தியா மேற்கொள்வதை தடுப்பது அல்லது அதை கைவிட புத்திமதி கூறுதல்.

2. சீனாவோடும் இந்தியா சேர்வது அல்லது ,ரஷ்யாவோடு சேர்வது அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்வது சேர்வது பிரான்ஸோடு சேர்ந்து கொண்டு அமெரிக்காவின் நலன்களை குறைப்பதை தடுப்பது.இதை இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதன் மூலம் செயல்படுத்துவது அல்லது இவை எல்லாவற்றியுமான பின்பத்தை கட்டமைப்பது.

3. இறுதியில் புது டெல்லியை இந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்காவின் ராணுவ மூலோபாய (strategic) நலன்களை பூர்த்தி செய்வதின் மூலமே அமையும் என்று நம்ப வைப்பது, பின்பு தெற்காசியாவில் அமெரிக்காவின் நலன்களை ஒருங்கிணைப்பது மற்றும் பலப்படுத்துவது. ஆனால் இந்தியா தனது ராணுவ சக்தியை பாகிஸ்தானை நோக்கியே வீணடிக்க வைத்து, தனது நலனை பூர்த்தி செய்வது. அதற்கு பாகிஸ்தானின் ராணுவ அந்தஸ்தை உயர்த்துவது.

கடந்த காலங்களில் ரஷ்யாவுடனான பரஸ்பர ராணுவ ஒப்பந்தம் தளர்த்தபட்டுவிட்டது, அதனால் அமெரிக்க ஆதிக்கத்துக்கு இப்போது அது தடுப்பரணாக இல்லை. நிலம் வழியாக போர் தொடுப்பதற்கு அதிக மனித இழப்புகளும் ,முன்னோக்கி செல்வதற்கான வசதிகளும் இந்திய படையை எதிர்கொள்ள இல்லாததால் அமெரிக்கா அதில் கவனம் செலுத்துவது இல்லை. ஆனால் அமெரிக்க விமான படையின் மூலமும் பசிபிக் ப்ளீட்டை இந்து மகா சமுத்திரத்தில் நிலை நிறுத்துவதன் மூலமும் அமெரிக்கா தனது ராணுவ ஆதிக்கத்தை தெற்காசிய பிராந்தியத்தில் அதிகப்படுத்துவதும் ஒருங்கிணைக்கவும் முயல்கிறது.

அமெரிக்காவின் படைத்துறை இந்த பிராந்தியத்தில் படைத்தளத்தை அமைத்துக்கொள்ள பல விதமான புவியியல் பரப்பையும் அறிந்துக்கொள்ளவும், அடையாளம் காணவும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. படைதலத்திற்கான தேவை பல்வேறு போர் நடவடிக்கை மூலமாகவும் அல்லது பிற சூழல்கள் மூலமாகமுவும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அது கருதுகிறது, அதில் இந்தியா பாகிஸ்தான் போரும், இந்தியாவின் அண்டை நாடுகள் மீது தொடுக்கப் போகும் ராணுவ ஆக்கிரமைப்பும் முதல் இடம் பிடிக்கிறது.

usa-states-arrive_n
இந்த பிராந்தியத்தை கண்காணிக்க மனிதவளங்களும், கருவிகளும் அதிகரிக்க படுகின்றது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் இலங்கையில் தனது புலனாய்வை அதிகப் படுத்துகின்றது. புலனாய்வை அதிகப்படுத்தலே வருங்கால அமெரிக்காவின் தெற்காசியாவின் போர்சக்திகளுக்கு பலம் சேர்க்கும்.

இது இந்தியாவின் அணு மற்றும் ஏவுகணை தளங்களை கண்காணிக்க உபோயோகபடுத்துகிறது. தற்போது இந்தியாவின் கிழக்கு கடற்கரை முள்ளிவாய்க்கால் பேரழிவு முன்பு வரை ( முள்ளிவாய்க்கால் பின்பான ராணுவ நிலைபாடுகள் குறித்து மற்றொரு கட்டுரையில் காண்போம் )

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளிருந்து கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அங்கு தான் அமெரிக்காவினுடைய மினனன்னு உளவு நிறுவனங்களும் (electronic intelligence) மற்றும் உளவாளிகளும் (human intelligence) உள்ளனர். எடுத்து காட்டாக விடுதலை புலிகளின் “புலிகளின் குரல்’’(voice of tigers) தாய்லாந்திலிருந்து ஒரு மணி நேரத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வாஷிங்டன்னில் உள்ள தலைமையகத்திற்கு national security agency அதிகாரிகளால் அனுப்பப்படும்.

தடை நீக்கப்பட்ட அமெரிக்கப்படைத் துரை ஆய்வு ஒன்று இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையுள்ளதாக முடிவு கொள்கிறது.மேலும் டீகோ கார்சியா தீவு (Diego Garcia) தான் இந்த துணைக் கண்டத்தில் மிகவும் நெருங்கிய அமெரிக்காவின் புறக்காவல் (military outpost) இடமாக உள்ளது. அது தோராயமாக இஸ்லாமாபாத்திலிருந்து 2500 மைல் தொலைவிலும் , புது டெல்லியிலிருந்து சுமார் 2200 மைல் தூரமும் கொண்டவையாக உள்ளன. அந்த ஆய்வு இந்தியா சுற்றி உள்ள வாய்ப்புகளை அடிப்படையாக மூன்று போது பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியாகும்.

முதலில் கிழக்கு பகுதியை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

– தமிழ் நிலவன்

நன்றி : தமிழ்ஸ்நவ்