‘இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள்’ என்கிற இந்த கட்டுரையானது, இலங்கையில் வசித்தவரும் பிரபல தமிழ் பத்திரிக்கையாளருமான, மறைந்த ‘தராக்கி’ சிவராம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும்.

முதலில் கிழக்கு பகுதி.

இந்த துணைக்கண்டத்தின் கிழக்குப்பகுதி பர்மாவை மற்றும் பிற நாடுகளை கொண்டது. பர்மாவுக்கும் அமெரிக்காவுக்குமான உருவில் பல பிணக்குகள் உள்ளன, பர்மா சீனாவுக்கு அரசியல் பொருளாதார ராணுவ உறவில் மிக நெருக்கமாக இருப்பதாலும், பிற்காலப்போர்சூழலில் அமெரிக்காவை விட இயற்கையாக சீனாவும் இந்தியாவும் நெருங்கி இருப்பதால் பர்மா தனது நலனுக்கு உகந்த இடம் அல்ல என அமெரிக்கா முடிவு செய்கிறது.

இரண்டாவது பகுதி மத்திய ஆசிய குடியரசுகளை (உஸ்பெகிஸ்தான் மற்றும் கசகஸ்தான் போன்ற அரசுகளை) உள்ளடக்கியதாகாகும், இந்த முன்னாள் சோவித் குடியரசுகளின் நல்லுறவை ஏற்படுத்துவதின் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெற போகும் அமெரிக்காவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நுழைவாக அமைகின்றது.

மூன்றாவது பகுதி மத்திய கிழக்கு ஆசியாவை,அதாவது இலங்கை-தமிழகத்துக்கு மேற்கு ஆசியாவை உள்ளடக்கியது. இங்கு உள்ள விமானப்படைத்தளம் போல் அமெரிக்காவிற்கு எங்குமே இவ்வளவு சிறப்பான விமானப்படைத்தளம் இல்லை. வளைகுடா,ஈராக் போரின் போது இப்பகுதியை நன்கு உபோயோகபடுதியது அமெரிக்கா. இந்த பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மையான அரசுகளும் அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உகந்த வெளிஉறவுக்கொள்கையயே கொண்டுள்ளன.(இரானிய அரசை விட்டுவிட்டால்)

புவியியல் ரீதியாக ஓமன் இந்தியாவிலிருந்து 500 நாடிகல் மைல் தொலைவிலேயே உள்ளது. ஓமன் அரசாங்கம் மேற்காசியாவில் அமெரிக்காவின் நீண்டக்கால நேச சக்தியாகும். சீப் சர்வதேச விமான நிலையமும் மாசிராஹ் தீவும் (seeb international airport and masirah island) விமானப்படைத்தளம் அமைக்க உகந்த இடமாகும்.

us-military
தெற்காசியாவில் விமானப்படைத்தளம் அமைக்க உகந்த இடம் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகும். அமெரிக்காவிற்கு மிக நீண்ட காலமாகவே தாய்லாந்துடன் இராணுவ ஒப்பந்தம் உள்ளன. யு தபோ (u tapaho) விமான படைத்தளத்தை அமெரிக்கா உபோயோப்படுத்த ஒப்பந்தங்கள் அமலில் உள்ளன.

இதே மாதிரி சிங்கபூரினிடமும் நீண்ட கால ராணுவ ஒப்பந்தங்கள் அமெரிக்கா போட்டுள்ளது. ஆனால் அமெரிக்கப்படை துறை ஆய்வு புது டெல்லி பாங்காக் சவுதி அரேபியா படை தளத்திலிருந்து 1600 நாடிகல் மைலும் சிங்கப்பூர் படைதலத்திலுருந்து 2500 நாடிகல் மைல் தொலைவிலும் உள்ளன இதன் காரணமாக 1990 களிரிந்து அமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்தில் ராணுவ படைத்தளம் அமைக்க ராஜதந்திர,பொருளாதார,ராணுவ, புலனாய்வு நடவடிக்கைகளில் இறங்குகிறது. இதற்க்கு அமெரிக்காவின் கூட்டாளிகளான ஜப்பான்,சிங்கப்பூர்,சவுத் கொரியா,தாய்லாந்து,ஆஸ்திரேலியா,கனடா நியூ சிலாந்து , பிரிட்டின் போன்ற நாடுகளை உபோயோகப்படுத்துக்கிறது.

இங்கு முக்கியாமாக குறிக்கப்பட வேண்டியது அமெரிக்கப் படைத் தளத்தை தெற்காசியாவில் அவர்கள் கட்ட முயற்சிக்கவில்லை. மாறாக தனது படைகளை நிலைநிறுத்த (basing opportunities) வாய்ப்புக்களை தேடுகிறது.இந்த மாதிரியான ஏற்கனவே நிறுவப்பட்ட தளத்தை தேடுவது அமெரிக்காவிற்கு அரசியல் மற்றும் வணிக லாபங்களை கொடுக்கிறது.

According to the DoD study, “The identification of bases that are currently capable (or nearly so) of supporting USAF operations has both political and financial advantages. There appears to be little appetite, either in the United States or in the region, for the construction of additional American military installations…The bases identified in this analysis should not require significant upgrades that could be costly in terms of either USAF budget dollars or American political capital.”

அப்படியான படைத்தளத்தை தேடும் போது 5 முக்கியக்கூறுகளை அடிப்படையாக வைத்து, எதிர்காலத்தில் அமைய போகும் அமெரிக்க விமானப்படைத்தலத்தை அடையாளம் காண்கிறார்கள்.

1. விமான ஓடுத்தளத்தின் நீளம்.

2. விமான ஓடுதளத்தின் அகலம்.

3. படை விமானங்களை, ‘’AIRLIFTER’’ மிகவும் எடை அதிகம் உடைய, போர்ச்சூழலில் அதிகமாக தேவைப்படும் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான நிலக்கொள்ளளவு

4. ஆயுதக்கிடங்கு இருப்பதற்கான சாத்தியம்.

5. விமானங்களை பராமரிப்பு செய்தல் ,எரிசக்தி நிரப்புதல், மற்றும் விமானம் பறப்பதற்கு முன்னே நடக்கும் பல வேலைகளுக்கான நிலவெளி.

அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்த “அணுகல் மூலோபாயம்’’ [access strategy] முறைப்படி பங்களாதேஷ், இலங்கை,மாலத்தீவு, நேபால் போன்ற நாடுகளை இனம் காண்கின்றனர். இந்த நாடுகளுடன் போர் ஆயத்தப்பயிற்சிகளும்,[Military Drills] தற்காலிக ராணுவ ஒப்பந்தகளும் போடப்படுகின்றன. இந்த ‘’அணுகல் மூலோபாயம் ‘’ முறைப்படி மின்னணு மற்றும் இதர புலனாய்வு கட்டைமைப்புக்களை அதிகப்படுத்த திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

இலங்கையே அமெரிக்காவின் இந்த தெற்காசிய பிராந்திய திட்டத்தில் முதன்மை நாடாகப்படுகின்றது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. இலங்கை மலாக்கா ஜலசந்திக்கும் [strait of Malacca] ஹோர்முஸ் ஜலசந்திக்கும் [Strait of Hormuz] மத்திய பகுதியில் உள்ளது. அமெரிக்காவின் படைத்துறை ஆய்வு “படைகளை நிலைநிருத்திக்கொல்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் ‘’ [basing opportunities] சிறந்ததாக உள்ளது என தெரிவிக்கின்றன. 2001 ஆம் ஆண்டு அமெரிக்கவிமானப்படைத்துறையும்,[usaf] மற்றும் அமெரிக்க உளவு அமைப்பு [Department of Intelligence Agency]image6

china-bay
இலங்கையில் உள்ள சீனக்குடா ,குடாஓயா ,சிகிரியா,கோக்கல மற்றும் தமிழ் ஈழ பகுதியில் உள்ள பலாலி விமான ஓடுத்தலத்தையும் பார்வையிடுகின்றனர். அதன்பின் ராணுவ ஆய்வு நிறுவனமான ராண்ட் கோற்பரேசென் [RAND coporation] ஒரு ஆய்வை வெளியிடுகிறது. The US and Asia: Toward a New Force Posture. (A public version of the study is available at the RAND Corp. It does not give the true picture)

இந்த ஆய்வை sponsor செய்தவர்கள் அமெரிக்க வான் மற்றும் விண்வெளி பிரிவுக்குக்கான துணை தலைவர் [Deputy chief of staff of us air and space operations] வான் படை மற்றும் பசிபிக் வான் படை கட்டளை தளபதிகள்.[ US Air Force and the Commander of the US’s Pacific Air Forces]. இந்த ஆய்வினுடைய இரகசியப்பதிப்பு சிறீலங்கா வான் படைக்கும், ராணுவ தலைமையகத்துக்கும், ராணுவ புலனாய்வுத்துறைக்கும் கொடுக்கப்படுகின்றது. இது அடிப்படையிலேயே தமிழீழத்தில் உள்ள பலாலி விமான ஓடு தளத்தையும், திரிகோணமலையில் உள்ள சீனா பே [China Bay]image7

சிங்களப்பகுதியிலுள்ள குடா ஓயாவிற்கான இராணுவ மேம்பாட்டுத் திட்டம் தீட்டபடுகிறது. குடா ஓயாவில் [Dual Purpose International Airfield] அமைக்க திட்டம் தீட்டப்படுகிறது.

2. இலங்கையின் ராணுவ மற்றும் உளவு அமைப்புக்கு ப்ரிடிஷினுடைய MI5, MI6 அமைப்புக்கும் அமெரிக்காவின் சிஐஏ [Central Intelligence Agency] நீண்டக்காலமாக நிறுவனமயப்பட்ட நெருங்கிய உறவு இருந்தது.இலங்கையின் உள்நாட்டு உளவு அமைப்பான Directorate Of internal Intelligence க்கு [இது ஆரம்பத்தில் NIB என்று அழைக்கப்பட்டது ] 1984 இலிருந்து பயிற்சி கொடுத்து வந்தது பிரிட்டனின் MI5 உளவு அமைப்பே

அமெரிக்காவின் CIA வும் பிரிட்டனின் MI5 குறிப்பிட்ட விடயங்களில் இலங்கையின் உள்நாட்டு உளவு அமைப்போடு சேர்ந்து வேலை செய்கின்றன. இலங்கையின் உள்நாட்டு மக்கள் பதிவேட்டை சாதாரண கோரிக்கையின் மூலம் இவ்விரு ‘’அந்நிய’’ உளவு அமைப்புகளும் பெற்றுவிட முடியும். வெளிநாட்டு தூதரகங்களோடு வேலை செய்யத் தனி பிரிவுத்தலைவரே இலங்கையில் இருந்தாலும் CIAவின் கொழும்பு நிலைய “ பிராந்திய பாதுகாப்பு அதிகாரி ‘’ இலங்கையின் [NIB] National Intelligence Bureau வோடு தான் ‘’இணைந்து’’ வேலை செய்வார் .இந்த பிராந்திய பாதுகாப்பு அதிகாரி என்ற பதவி என்பது அமெரிக்க தூதரகத்திலயே ‘’பட்டியிலிடப்படாத பதவி’’ [unlisted post in us embassy].

[CIA வின் கொழும்பு நிலைய தலைவர் தான் அமெரிக்கா தூதரகத்தின் உபக்குழுத்தலைவர்] புது டெல்லியில் உள்ள CIA நிலையமும் இலங்கையின் உள்நாட்டு உளவு [Directorate Of internal Intelligence] அமைப்போடு குறிப்பிட்ட திட்டங்களுக்குகாக சேர்ந்து வேலை செய்கிறது.

உலகின் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் [NSA] , கொழும்பில் பிரசன்னம் கொண்டிருக்கின்றது, அது அமெரிக்கப் படை மற்றும் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தின் [Department Of Intelligence Agency-DIA] மூலம் செயல்படுகிறது. அதன் செயல்பாடுகளின் நிலை தெளிவாக இல்லை.

NSA / DIA உளவு அமைப்புக்கள் நேரடியாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலுள்ள தங்கள் தலைமையகத்துக்கு நேரடியாக தகவல் அனுப்புக்கின்றன. கொளும்புவிலுள்ள

CIA அமைப்பு அமெரிக்கா தூதரின் அதிகார வரம்புக்குக்கீழ் வருபவர்.

– தமிழ் நிலவன்

நன்றி : தமிழ்ஸ்நவ்

இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள் – பாகம் 1http://www.eelamenews.com/?p=117964