இலங்கையில் நடக்கும் மாகாண சபை தேர்தல் ஒரு நாடகமே – மே பதினேழு இயக்கம்!

0
620

may17ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என தமிழர்கள் மீது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது சட்டத் திருத்தத்தினை திணிக்கும் இந்திய அரசின் சதியை முறியடிப்போம். ஒன்று திரள்வோம். 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் இறையாண்மையை காக்கும் தீர்மானமே. இனியொருவரதராஜப்பெருமாளை தமிழீழம் ஏற்காது எனச் சொல்வோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக தமிழர்களை சிங்களத்தின் அடிமையாக மாற்றத் துடித்த சதியை தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து வென்றார்கள். மாவீரன் திலீபன் தியாகம் செய்து அம்பலப்படுத்திய இந்தியச் சதியை மீண்டும் நிறைவேற்ற இந்தியா துடிக்கிறது. இந்த துரோகத்தினை இனிமேலும் பார்க்க முடியுமா?. அன்று அவர்கள் சொல்லிய சென்ற சமரசமற்ற அரசியல் புரிதலோடு போராட்டத்தினை தமிழகத்தில் முன்னெடுப்போம்.

தமிழர் பகுதியில் தேர்தல் நடத்துவதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழீழ குடிமக்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவிரும்புகிறார்கள் என சொல்ல விரும்புகிறது. அடக்குமுறை மிகுதியான தமிழீழத்தில் வாழும் நம் உறவுகளுக்காக நாம் களம் காணுவோம். இந்தியாவின் அயோக்கியத்தனத்தினை வெல்வோம். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தமிழீழவிடுதலைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக் கோருவோம்.

தமிழர்களாய் ஆகஸ்டு 17 , மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம். பகிருங்கள் தோழர்களே….
மே பதினேழு இயக்கம்.