இலங்கையில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே என பிரித்தானிய முன்னாள் உள்விவகார அமைச்சர் திரு david blunkett அவர்கள் தெரிவித்துள்ளார்.

David Blunket Mp
பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் மீது ஓர் சர்வதேச விசாரணைக்கான மேலதிக அழுத்தத்தை பிரித்தானியா ஏற்படுத்தவேண்டுமெனவும் , புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடைசெய்வதன்மூலம் தமிழர்களின் மீது தீவிரவாதப்பட்டத்தை கட்டும் இலங்கை அரசின் நடவடிக்கையை எதிர்க்குமாறு கோரவும் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் பிரிந்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த சந்திப்பின்போது கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் விசாரனைகளுக்கு இலங்கை ஒத்துழைக்காமைக்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டார்.