ramathasஇலங்கை பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நாடகமாடுவதாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிப்பதாகவும் பா.ம.க. பொதுக்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ம.க. தலைமைப் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் 2014ம் ஆண்டில் ஆற்ற வேண்டிய பணிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. அமைத்த சமூக ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

அதில் இலங்கை பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நாடகமாடுகின்றன. மணல் மற்றும் கிரனைட் விற்பனை முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இலங்கைப் பிரச்சினையில் நாடகம்: மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம்

இலங்கையில் போர் முடிவடைந்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. போர் முடிந்த ஆறு மாதங்களில் அறிவித்திருந்தார்.

இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை இந்தியா உறுதி செய்யும் என்று மத்திய அரசும் சான்றளித்தது. ஆனால், வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டன.

தமிழர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய ஐ.நா. மூலம் தனித் தமிழீழம் அமைப்பதும் தான் ஈழத் தமிழர்களுக்கு நாம் வழங்கும் நீதியாக இருக்கும்.

இதை செய்யத் தவறிய மத்திய அரசுக்கும், அவ்வாறு செய்யும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி தரத் தவறிய முந்தைய தி.மு.க. அரசு மற்றும் இப்போதைய அ.தி.மு.க. அரசுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.