இலங்கை தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் எப்போதும் கிடைக்கப் போவதில்லை ஆனால் யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை தமிழர்கள் வாக்கு முடிவு செய்யும்

சுமந்திரனுக்கு ஒருபோதும் வாக்கு அளிக்காதீர்கள்.

காரணம் நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றமே என்று சொன்ன சுமந்திரனுக்கு ஒருபோதும் வாக்கு அளிக்காதீர்கள்.

போர்க்குற்ற விசாரணையில் புலிகளும் நிறைய தவறுகள் செய்தார்கள் என்றும் விடுதலைப்புலிகளையும் விசாரிக்கவேண்டும் என்று சொன்ன சுமந்திரனுக்கு எப்போதும் வாக்களிக்காதீர்கள்.

தமிழ் போராளிகளின் ஆயுதப் போராட்டம் வன்முறை என்று அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக பல ஆயிரம் தமிழ் போராளிகள் உயிரை கொடையாகக் கொடுத்த அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு எந்த விதத்திலும் வாக்கு அளிக்காதீர்கள்.

விடுதலை புலிகளையும் அவர்கள் தங்கிய லட்சியத்தையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஆயுதப்போராட்டம் விடுதலைப்புலிகளின் தவறான முடிவு என்று சொன்ன சுமந்திரனுக்கு வாக்களிக்கிறார்கள் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த சிங்களவர்களுடன் தான் 5 வயது முதல் சேர்ந்து வாழ கிடைத்தது நான் செய்த மிகப்பெரிய பாக்கியம் என சொன்ன துரோகி சுமந்திரனுக்கு வாக்களிக்காதீர்கள்.

தமிழ் மக்கள் வாக்குகளை பெற்று தமிழனுக்கு எதிராக தன் முகத்தைக் காட்டிக் கொள்ளும் துரோகி சுமந்திரனுக்கு ஒருபோதும் வாக்களிக்காதீர்கள்.

நீங்கள் இதையெல்லாம் மீறி சுமந்திரனுக்கு வாக்களித்தால் சுமந்திரன் சொன்னதும் சிங்கள அரசு செய்த இனப்படுகொலை சரிதான் உலகம் ஏற்றுக்கொண்டது என்பதை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டதாக பொருள்படும் ஆதலால் சுமந்திரனுக்கு ஒருபோதும் வாக்களிக்காதீர்கள்.

தமிழகத்தில் இருந்து கொண்டு தரம்கெட்ட எங்கள் சாக்கடை தமிழக அரசியலில் வாழ்ந்துகொண்டு நான் இதை சொல்வதற்கு காரணம் ஒருவனுக்கு இன மொழி உணர்வு என்பது பிறப்பிலிருந்து வரவேண்டும்.

இப்படி நடிப்பு அரசியலால் வராது உலகில் எல்லா வகையிலும் தமிழ் மக்களின் வாழ்வியல் தடம் பொருளாதாரம் கல்வி அறிவு இயற்கை வளம் விவசாயம் வேலை வாய்ப்புகள் இப்படி எல்லாத்தையும் குழிதோண்டி புதைப்பதற்கும் தமிழனுக்கு எதிராக மிகப்பெரிய சதிவேலை உலகம் செய்து கொண்டே இருக்கிறது.

நம்மை நாமே தற்காத்துக் கொள்ள இப்படிப்பட்ட துரோகிகளை தூரத்தில் வைப்பது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தில் இருந்து கீரமங்கலம் சிகா.லெனின் 9047357920

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here